24 January 2013

விஸ்பரூபம் VS மனிதர்கள்!!!

இப்பெல்லாம் பிரபலம் ஆகணும் என்றா ஒன்றில் பிரபலத்தை வம்புக்கு இழுக்கனும் அல்லது பிரபலம் நடித்த படத்த வம்புக்கு இழுக்கனும். இதுதான் இப்பத்தைய குறுக்கு/சிறந்த வழி!

சினிமா என்பதை சினிமாவாக பார்க்காமல் அதையே வாழ்க்கையாக பார்க்க ஆரம்பித்ததன் விளைவு அல்லது எங்கே அது எம்மை அல்லது எம் மதத்தை அழித்து விடுமோ என்ற பயம். இந்த மூன்று மணிநேர சினிமாதான் உங்களை/மதத்தை அழித்து விடும் என்று பயப்படுவதை என்ன வென்று சொல்ல? இதுவரையில் எத்தனையோ மதத்தை பற்றி கிண்டலாகவும் கேலியாகவும் கதாநாயகர்கள்/நகைச்சுவை நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அந்த மதம் எல்லாம் இப்போ இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டதா அல்லது அந்த மதம் சார்பானவர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? சில மாதங்களுக்கு முன் "துப்பாக்கி" என்று ஒரு படம் வந்தது; அதை சும்மா விட்டு இருந்தா, "எந்திரன்", "சிவாஜி" படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்காது வசூலில். விஸ்பரூபத்தையும் அந்த லிஸ்டில் நிச்சயம் வர வைப்பீர்கள் அல்லது வைத்து விட்டீர்கள்.

ஆமா, உலகில் தீவிரவாதம் உள்ள நாடுகள் எவை? அதிகமான தீவிரவாத அமைப்புகள் எவை? தீவிரவாத செயல்களில் அதிகமாக ஈடுபடுவோர் யார்?  இதற்க்கு பதில் தெரிந்தால் எல்லாம் தெரிந்த நீங்கள் அப்பாவியான எனக்கு பதில் இடுங்கள்!

மும்பை தாக்குதல் பற்றிய படம் எடுக்கும் போது, நீங்கவிரும்பா விட்டாலும் ஒரு சமூகத்தையே சார்ந்து எடுக்க வேண்டி வரும்! இதை மறுப்பவர்கள் உண்டா? "அலைகள் ஓய்வதில்லை" எடுத்ததற்காக எந்த கிறிஸ்தவ மதமும் பிரச்சினை பண்ணியதாக நான் அறிய வில்லை, "தேவர் மகன்" எடுத்ததற்காக எந்த ஜாதி பிரச்சினை வந்ததாகவும் எனக்கு தெரிய வில்லை! அப்புறம் ஏன் நீங்க?

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன அதற்க்கு குரல் கொடுப்போர் என்னவோ அப்பாவி பொது மக்களே  அன்றி மதம் மதம் என்று கட்டி அழும் மனிதர்கள்!! அல்ல.



4 comments:

  1. Good post!.
    I support kamalhasan!!

    http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_3377.html
    Thank you

    ReplyDelete
  2. உலகில் தீவிரவாதம் உள்ள நாடுகள் எவை? அதிகமான தீவிரவாத அமைப்புகள் எவை? தீவிரவாத செயல்களில் அதிகமாக ஈடுபடுவோர் யார்? இதற்க்கு பதில் தெரிந்தால் எல்லாம் தெரிந்த நீங்கள் அப்பாவியான எனக்கு பதில் இடுங்கள்!

    //ஒரே பதில். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் தீவிரவாதிகள். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.
    http://rsgurunathan.blogspot.in/2013/01/blog-post_5.html
    படத்தில் கோவை, மதுரை மற்றும் தமிழக பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக காட்டியுள்ளாராம்.
    அதை எப்படி நியாயபடுத்த முடியும்?

    சிறுவர்கள், பெண்களுக்கு இஸ்லாமியர்கள் தீவிரவாதம் கற்றுத்தருவதாக காட்டியுள்ளாராம்.
    அதை எப்படி நியாயபடுத்த முடியும்?

    குரானை தீவிரவாதிகளின் கையேடாக காட்டியுள்ளாராம்.
    அதை எப்படி நியாயபடுத்த முடியும்?

    மதத்தை கொச்சைப்படுத்தாமல் கமல் அவர்களால் பல நல்ல படங்களை தர முடியும்.
    அதை அவர் செய்ய முன்வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உலகில் எல்லோரும் ஈடுபட வில்லை என்று நான் சொல்லவில்லை! "அதிகமாக" என்றுதான் கேட்டேன்.

      "சிறுவர்கள், பெண்களுக்கு இஸ்லாமியர்கள் தீவிரவாதம் கற்றுத்தருவதாக காட்டியுள்ளாராம்.
      அதை எப்படி நியாயபடுத்த முடியும்?"
      தலிபான்களின் காலத்தில் ஆப்கானிஸ்தானில் இப்படி நடக்க வில்லை என்று உங்களால் கூற முடியுமா? மற்றது, கமல் நிச்சயமா எதுவித அடிப்படை காரணமோ அல்லது ஆதாரமோ இல்லாமல் அப்படை ஒரு காட்சி வைத்து இருக்க மாட்டார்.

      Delete
  3. Good Question. Will they give the answer?

    ReplyDelete