10 January 2013

கதுரும அன்புடன் வரவேற்கிறது

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று விட்டு தன் மனைவி குழந்தைகளுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்தார் திரு.தமிழ் அவர்கள். கிட்டத்தட்ட 25 வருடங்கள் அதாவது 2040 ஆம் ஆண்டு.

அவருக்கு இலங்கையில் உள்ள இடங்களை சுத்தி பார்க்க வேணும் என்ற ஆசையை விட அவரின் பிள்ளைகளுக்கு அதிகமாக இருந்தது. எங்கே போவோம் என கதை எழுந்த போது "கதுரும" போவோம் என சொன்னார்கள். அது எங்கே இருக்கு என கேட்டார்கள் பாட்டனிடம்; பாட்டனும் தன் Apple Tap ஐ எடுத்து எங்கே இருக்கு என Google Map இல் காட்டினார். சரி என எல்லோரும் வாகனத்தில் புறப்பட்டார்கள்.

ஒரு சில மணித்தியாலத்தில் செல்ல வேண்டிய இடம் வந்தது. "கதுரும அன்புடன் வரவேற்கிறது" என வரவேற்றது. எல்லோரும் இறங்கி தங்கள் கமேராவால் போட்டோ எடுத்து கொண்டார்கள்! சற்று காற்று வாங்க அங்கே இங்கே நடந்து சென்றார்கள். அங்கே ஒரு புதருக்குள் மதில் சுவரில் தமிழில் எழுதி இருக்க தகப்பனிடம் கேட்டார்கள் என்ன எழுதி இருக்கு என. தகப்பன் சொன்னார்.......

 
"கதிர்காமம் அன்புடன் வரவேற்கிறது"

No comments:

Post a Comment