24 January 2013

விஸ்பரூபம் VS மனிதர்கள்!!!

இப்பெல்லாம் பிரபலம் ஆகணும் என்றா ஒன்றில் பிரபலத்தை வம்புக்கு இழுக்கனும் அல்லது பிரபலம் நடித்த படத்த வம்புக்கு இழுக்கனும். இதுதான் இப்பத்தைய குறுக்கு/சிறந்த வழி!

சினிமா என்பதை சினிமாவாக பார்க்காமல் அதையே வாழ்க்கையாக பார்க்க ஆரம்பித்ததன் விளைவு அல்லது எங்கே அது எம்மை அல்லது எம் மதத்தை அழித்து விடுமோ என்ற பயம். இந்த மூன்று மணிநேர சினிமாதான் உங்களை/மதத்தை அழித்து விடும் என்று பயப்படுவதை என்ன வென்று சொல்ல? இதுவரையில் எத்தனையோ மதத்தை பற்றி கிண்டலாகவும் கேலியாகவும் கதாநாயகர்கள்/நகைச்சுவை நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அந்த மதம் எல்லாம் இப்போ இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டதா அல்லது அந்த மதம் சார்பானவர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? சில மாதங்களுக்கு முன் "துப்பாக்கி" என்று ஒரு படம் வந்தது; அதை சும்மா விட்டு இருந்தா, "எந்திரன்", "சிவாஜி" படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்காது வசூலில். விஸ்பரூபத்தையும் அந்த லிஸ்டில் நிச்சயம் வர வைப்பீர்கள் அல்லது வைத்து விட்டீர்கள்.

ஆமா, உலகில் தீவிரவாதம் உள்ள நாடுகள் எவை? அதிகமான தீவிரவாத அமைப்புகள் எவை? தீவிரவாத செயல்களில் அதிகமாக ஈடுபடுவோர் யார்?  இதற்க்கு பதில் தெரிந்தால் எல்லாம் தெரிந்த நீங்கள் அப்பாவியான எனக்கு பதில் இடுங்கள்!

மும்பை தாக்குதல் பற்றிய படம் எடுக்கும் போது, நீங்கவிரும்பா விட்டாலும் ஒரு சமூகத்தையே சார்ந்து எடுக்க வேண்டி வரும்! இதை மறுப்பவர்கள் உண்டா? "அலைகள் ஓய்வதில்லை" எடுத்ததற்காக எந்த கிறிஸ்தவ மதமும் பிரச்சினை பண்ணியதாக நான் அறிய வில்லை, "தேவர் மகன்" எடுத்ததற்காக எந்த ஜாதி பிரச்சினை வந்ததாகவும் எனக்கு தெரிய வில்லை! அப்புறம் ஏன் நீங்க?

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன அதற்க்கு குரல் கொடுப்போர் என்னவோ அப்பாவி பொது மக்களே  அன்றி மதம் மதம் என்று கட்டி அழும் மனிதர்கள்!! அல்ல.



18 January 2013

பிதா மகன்

தினமும் மாலையில் இரவு நேரத்தில் வரும் தந்தையை பார்த்து அவர் சிறு வயது மகன் கேட்கிறான்,

 
மகன் : அப்பா, நீங்கள் எவ்வளவு மாசத்துக்கு உழைக்கிறீர்கள்?

தந்தை : சிறு சினத்துடன், அது உனக்கு தேவையில்லாத விடயம் உன்னை யார் எப்படி கேட்க சொன்னது?
 
மகன் : நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உழைப்பீர்கள் எனவாவது சொல்லுங்கள்
 
தந்தை : ம்ம்ம்ம் ஒரு ஆயிரத்து ஐநூறு இருக்கும்; ஏன்?
 
மகன் : இந்தாருங்கள் 500 ரூபாய், என்னுடன் இந்த காசுக்கு எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடியும்?

 
 
பளார்!!!!!!!

12 January 2013

மிஸ்டர் அஜித்

நம்ம தல எவ்வளவு நல்லவர், வல்லவர், நேர்மையானவர், அறிவாளி!!! அப்படிப்பட்டவரை 23ஆம் புலிகேசி மாதிரி கற்பனை பண்ணினா எப்படி இருக்கும்? பண்ணிடுவோம் வாங்க :)




01) நிருபர் : உங்கள் பிறந்த திகதி என்ன?
        அஜித் : மே 1
      நிருபர் : எந்த ஆண்டு?
       அஜித் : ஒவ்வொரு ஆண்டும்!




02) நம்ம தல லண்டனுக்கு சூட்டிங் போய் வந்தவுடன், ஷாலினியிடம் கேட்டார் "நான் வெளிநாட்டவன் மாதிரியா இருக்கிறேன்" என; ஷாலினி சொன்ன இல்லை ஏன் என கேட்க, தல சொன்னார், லண்டனில் ஒரு வெள்ளக்காரி கேட்டா நீ வெளிநாடவனா என்று!!


03) இன்னொருக்கா அமெரிக்காவுக்கு நம்ம தல போய் இருக்கார் சூட்டிங் விடயமா; அங்கே ஒரு வெள்ளைக்காரன் கேட்டான் "Any great man born in your Country" என, நம்ம தல சொன்னார்; இல்லை, குழந்தைகள்தான் பிறந்து இருக்கு என!


04) நிருபர் : நீங்க புத்தர் வாழ்க்கையை படிப்பதாக கேள்வி பட்டேன், "புத்த ஜெயந்தி" பற்றி சொல்ல முடியுமா என?
       அஜித் : அவர் இந்தியாவில் பிறந்தவர், தத்துவ ஞானி  ஆனால் எனக்கு ஜெயந்தி பற்றி தெரியாது
      நிருபர் : ?????


05)  தல சூட்டிங் இல்லாம ஒரு நாள் வீடில் சும்மா இருந்தார், அந்த நேரம் பார்த்து ஒரு கரப்பொத்தான் வர, அதை வைச்சு காமெடி பண்ண சீ சீ சீ ஆராட்ச்சி பண்ண இறங்கினார்! என்ன ஆராட்ச்சி என்றா,

அதன் ஒரு காலை வெட்டி விட்டு "நட" என்றார் அது நடந்தது, மீண்டும் மறுகாலை வெட்டி விட்டு "நட" என்றார் அதுவும் நடந்தது, எப்படி கடைசி காலையும் வெட்டிவிட்டு "நட" என்றார் அது நடக்கல....

ஆச்சர்யம் தாங்காமல்; ஷாலு, நான் ஒரு உண்மையா கண்டு பிடிச்சிட்டேன்; கரப்போத்தானுக்கு எல்லா காலையும் வெட்டினா அதுக்கு "காது கேளாது"


06) நம்ம தல இப்ப ஜெயிலில் களி திண்றார். ஏன்னா? ஒரு பெண் பத்திரிகை நிருபர் அவரை பேட்டி எடுக்க போய் இருந்தா, நம்ம தல டக்கெண்டு "அமுக்கிட்டார்"......
ஏன் என்றா அவரின் மார்பில் Press என Batch குத்த பட்டு இருந்தது!

என்னை அடிக்க நினைக்கிறவங்க எல்லாம் லைன் கட்டி வாங்க :)


      

11 January 2013

கடல் படத்தின் கதை என்ன

என்னடா படமே வரவில்லை அதற்குள் கதை கிதை என சொல்றான் என கேட்கிறிங்களா! நாம யாரு புறாவுக்கே மணி அடித்த கூட்டம் ஆச்சே, அதானுங்க Trailer பார்த்து கதை சொல்ற கூட்டம்! இன்றுதான் Trailer வந்திச்சு அதை வைச்சு இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என ஊகித்து எழுதுகிறேன்; அம்புட்டுதான்!

கதை என்னென்னா , கார்த்திக்கின் செல்ல புதல்வன் கவுதம் ஒரு அநாதை அவர் மீனவர் குப்பத்திலே அவர்களில் ஒருவனாக வளருகிறார். அங்கே பாதிரியாராக வரும் அரவிந்தசாமி கவுதம் மேல் இரக்கம் கொண்டு உதவுகிறார். கவுதம் பெரியவன் ஆனதும் அர்ஜுனிடம் அடியாளா சேருகிறார். அரவிந்தசாமி  அதை விட்டு வெளியே வரும் படி கூறுகிறார் ஆனால் அவர் மறுக்கிறார். அவருக்கு ஒரு காதல் வருகிறது; வந்தது ராதா மகள், கார்த்திகா தங்கை துளசி மேலே! காதலி  சொல்வதால் அதை விட்டு வெளியே வர முயற்ச்சிக்கிறார்.............

இவ்வளவும் நாங்கள் எத்தனயோ படங்களில் பார்த்து புளித்துப்போன கதை+காட்சி. இதை மணிரத்தனம்,  ஜெமோ வின் துணையுடன் எப்படி வித்தியாசமா சொல்ல/தர போகிறார் என்பதே எதிர் பார்ப்பு.

ஆங், கிளைமாக்ஸ் சொல்ல மறந்திட்டேன்; இவ்வளவும் பல படங்களில் வந்தவை என்றாலும் அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் வித்தியாசமானதா இருக்கும் என நம்புகிறேன். அதற்க்கு காரணம் உண்டு. மணிரத்னம்+ஜெமோ. Trailer இல் கிளைமாக்ஸ் என்ன என்று சொல்லல அதனால எனக்கு தெரியல! அதை வெண்திரையில் கண்டுகளியுங்கள். இப்போ அதன் Trailer ஐ கண்டு களியுங்கள். 






இந்த துளசி பொண்ணு சமத்தா இருக்கு சமந்தா போல :)

10 January 2013

கதுரும அன்புடன் வரவேற்கிறது

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று விட்டு தன் மனைவி குழந்தைகளுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்தார் திரு.தமிழ் அவர்கள். கிட்டத்தட்ட 25 வருடங்கள் அதாவது 2040 ஆம் ஆண்டு.

அவருக்கு இலங்கையில் உள்ள இடங்களை சுத்தி பார்க்க வேணும் என்ற ஆசையை விட அவரின் பிள்ளைகளுக்கு அதிகமாக இருந்தது. எங்கே போவோம் என கதை எழுந்த போது "கதுரும" போவோம் என சொன்னார்கள். அது எங்கே இருக்கு என கேட்டார்கள் பாட்டனிடம்; பாட்டனும் தன் Apple Tap ஐ எடுத்து எங்கே இருக்கு என Google Map இல் காட்டினார். சரி என எல்லோரும் வாகனத்தில் புறப்பட்டார்கள்.

ஒரு சில மணித்தியாலத்தில் செல்ல வேண்டிய இடம் வந்தது. "கதுரும அன்புடன் வரவேற்கிறது" என வரவேற்றது. எல்லோரும் இறங்கி தங்கள் கமேராவால் போட்டோ எடுத்து கொண்டார்கள்! சற்று காற்று வாங்க அங்கே இங்கே நடந்து சென்றார்கள். அங்கே ஒரு புதருக்குள் மதில் சுவரில் தமிழில் எழுதி இருக்க தகப்பனிடம் கேட்டார்கள் என்ன எழுதி இருக்கு என. தகப்பன் சொன்னார்.......

 
"கதிர்காமம் அன்புடன் வரவேற்கிறது"