![]() |
| At Fingara Club |
எல்லோர் வாழ்கையிலும் பாடசாலை நாட்கள் என்பது மறக்க முடியாத ஒன்று, அதே போல் நண்பர்களும் மறக்க படாதவர்கள். உண்மையான நட்பு என்பது பாடசாலை மாணவர்களிடம் தான் இருக்கிறது என்று என் முகாமையாளர் சொல்லவார், அதில் அர்த்தமும் உள்ளது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக கூடிய நட்பு.
நான் கொழும்பு இந்துக்கல்லூரியில் எனது உயர் தரத்தை 2002 ஆம் ஆண்டு முடித்தேன், அத்தோடு சில நண்பர்களின் தொடர்பும் விடு பட்டு சென்றது. ஒரு சிலர் அண்மையில் இருப்பதால் கதைக்க கூடியதாக இருந்தது, மற்றும் சிலர் என்னோடு வேறு படிப்பு படித்ததால் கதைக்க கூடியதாக இருந்தது. பல பேர் வெளிநாடு சென்று விட்டதால் அவர்களில் சில பேருடன் Facebook கின் உதவியுடன் தொடர்பை வைத்து கொண்டு இருக்கிறேன்.....
எனக்கு ஆச்சரியம் ஒரு சில பேர் UK யில் இருந்து வந்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் 1983 கலவர ஆண்டில் பிறந்த படியால் என்னவோ ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இன்னும் திருமணம் முடிக்க வில்லை. ஏதேனும் சாபமோ?
பிறகு சில போட்டிகள், அதற்கு பிறகு நாங்கள் 2.00 மணி வரை அங்கு இருந்தோம். மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.வீடு வரும் போது இரவு 2.30 தை தாண்டி விட்டது. என்றும் மாறாத பசுமையான நினைவுகள் மனதில்.......


No comments:
Post a Comment