சகுனி Vs பில்லா 2
சினிமா என்பது, தமிழ்நாடு அல்ல இந்தியாவையும் தாண்டி இலங்கையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது இப்போ. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை அதற்கேற்ப்ப ரசிகர்கள், அவர்கள் (ரசிகர்கள்) செய்யும் வேண்டத்தக்க, வேண்டத்தகாத செயல்கள் எல்லாம் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது....
சில நேரங்களில் சில நட்சத்திரங்களின் படங்கள் ஒன்றாக மோதும் போது இரு நடிகர்களின் ரசிகர்கள் மாத்திரம் அல்ல குறிப்பிட்ட நடிகர்களை பிடிக்காத ரசிகர்களும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் ஒன்று சேர்வார்கள், "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற கோட்பாடு போல?

Vs
இம்முறையும் இரண்டு படங்கள் மோத இருக்கின்றது முதலாவது தல என்று அழைக்கப்படும் அஜித்தின் "பில்லா 2". பில்லாவின் தொடர்ச்சியாக வரும் படம் மற்றது மங்காத்தா என்ற வெற்றி படத்தை தொடர்ந்து வரும் படம் என்பதால் எதிர் பார்ப்பு கூடி இருக்கிறது. மற்றது, இப்போது தமிழ் நாட்டில் மாத்திரம் அல்ல ஆந்திராவிலும் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் கார்த்தியின் "சகுனி". தொடர்ந்து இவரின் படங்கள் வெற்றி மட்டும் அல்ல வசூலையும் பெற்று வருகிறது.
பில்லா 2 வை பொறுத்த வரை அஜித்தின் ரசிகர்களே பலம். அவரின் சமீபத்திய படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர்கள் ரொம்ப உற்ச்சாகமாக இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல அவரின் சினிமா வாழ்க்கையில் இந்த படம்தான் அதிக விலைக்கு விலைப்பட்டு இருக்கிறது. அதனால் பெரிய எதிர் பார்ப்பு உள்ளது. பாடல்கள் வந்து அஜித் ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறது என்று சொல்ல முடியும், ஆனாலும் என்னை பொறுத்த வரை இந்த முறை யுவன் ஏமாற்றி விட்டார். பார்ப்போம் பின்னணி இசையில் எப்படி கலக்க போகிறார் என்று. ஏன்னென்றால் அவரின் தகப்பனாரை போல் இவரும் பின்னணி இசையில் கலக்குபவர். மற்றது அஜித்தின் படங்கள் எப்போதும் தனியாக தான் வரும் மற்றைய நடிகைகளின் படங்களுடன் வராது. இந்த முறை சகுனியுடன் மோத இருக்கிறது. பார்ப்போம் மோதி ஜெயிக்கிறாரா அல்லது வழமை போல் தனிய வருகிறாரா என்று.
சகுனியை பொறுத்தவரை கார்த்தியின் ரசிகர்கள் அத்தோடு அண்ணனின் ரசிகர்கள் என்பது மட்டும் அல்லாது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி ரசிக்கும் நடிகர். அதனால்தான் ஆந்திராவிலும் அவரால் கோலாட்ச்ச முடிகிறது. எல்லோரும் பார்க்க கூடிய வகையில் படம் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதே சகுனியின் மற்றைய பலம். இந்த முறையும் G.V.பிரகாஷ் பாடல்களை வித்தியாசமாக தர முயன்று இருக்கிறார். கேட்க கூடிய வகையில் இருக்கிறது.
பில்லா ஒரு Gangster படம். அது எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காரணம், ஆபாசம் மற்றும் வன்முறை காரணமாக A தர சான்றிதலே கிடைத்து இருக்கிறது.
சகுனியை பொறுத்த வரை அதில் காதல் நகைச்சுவை சென்டிமென்ட் ஆக்க்ஷன் எல்லாமே இருக்கும். மற்றது, இந்த படம் ஒரு அரசியல் படம் மாதிரி இருப்பதால் எதிர் பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. பில்லா படத்தை விட 1 கோடி குறைவாகவே தமிழ் நாட்டில் விலை போய் இருப்பது தல ரசிகர்களை அதிர்ச்சிக்கும் கார்த்தி ரசிகர்களை ஆச்சரியத்துக்கும் உள்ளக்கி இருக்கிறது. பார்ப்போம், யாருக்கு யார் சகுனி என்று!




No comments:
Post a Comment