15 July 2012

பில்லா - வேணாம், வலிக்குது, அழுதிடுவேன்


   
சில பல காரணங்களால் முதலிலேயே பார்த்த படத்தை பற்றி எழுத முடிய வில்லை. இருந்தாலும் படம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். 

ஒரு படத்துக்கு ஓவர் எதிர் பார்ப்பு ஆகாது என்பதை 7ஆம் அறிவுக்கு பிறகு மீண்டும் நிருபித்து இருக்கும் படம். அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்று நினைத்தாரோ தெரிய வில்லை இயக்குனர். அப்படி ஒரு கொலை வெறி தாக்குதல் எங்கள் மீது.  

கதை என்று பார்த்தால், இலங்கையில் இருந்து அகதியாக மண்டபத்துக்கு போகிறார். அங்கு ஒரு வலது குறைந்த ஆளை அடிப்பதுடன் தொடங்குகிறது அவரின் டான் வாழ்க்கை. அடி வாங்கியவர் வில்லனுடன்(பல வில்லன்கள் உண்டு) கூட்டு சேர்ந்து கொண்டு இவரையும் இவர் நண்பரையும்(பில்லா வில் அஜித்தின் நண்பராக வரும் ரஞ்சித்)  அனுப்புகிறார்கள். அதில் வைரங்கள் இருக்கிறது என்று தெரியாமலே போகிறார்கள். போலீஸ் செக் பண்ணும் போதுதான் தெரிய வருகிறது இதில் வைரங்கள் இருக்கிறது என்று. போலீஸ் எல்லோரையும் போட்டு தள்ளி விட்டு வைரங்களை நேர்மையாக அண்ணாச்சியிடம் ஒப்படைக்கிறார்கள். இவர்களின் நேர்மையை பார்த்த அண்ணாச்சி இவர்களுக்கு வேலை கொடுக்கிறார். பிறகு எப்படி டேவிட் பில்லா எப்படி டான் ஆனான் என்பதை DVD யில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் படத்தில் நான் ரசித்த விடயங்கள், படத்தில் வரும் locations , ராஜசேகரின் ஒளிப்பதிவு, புருன அப்துல்லாவின் கவர்ச்சி, இரா.முருகனின் வசனங்கள். வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

ரொம்ப அழ வைத்த விடயம், 5க்கும் 10க்கும் அல்லாடி கொண்டு இருப்பவர் போடும் சூ வை பாருங்கள். Machine Gunனால் வில்லன்களில் ஆட்கள் சுடுகிறார்கள் இவர் Shotgunனால் சுடுகிறார். அவர்கள் பட பட என சுடும் ஒன்றும் பட வில்லை இவர் டோப்பு டோப்பு என்று சுடும் ஒவ்வொன்றும் படுகிறது. தலையில் அடி பட்டு மாடி படியில் இருந்து  கீழ் விழுந்து ஏதோ கட்டிலில் இருந்து எழும்பியவர் மாதிரி எழுந்து அடியாட்களின் கதையை முடிக்கிறார். இன்னொரு வில்லன் ஜெட் லீ மாதிரி அவரின் ஆரம்ப காட்ச்சியில் தூள் பின்னுகிறார் ஆனால் கடைசியில் வடிவேலு மாதிரி அடி வாங்கி சாகிறார். அந்த ஆயுத Factoryக்கு எந்த வித எதிர்ப்பு இல்லாமல் சும்மா Tea குடிக்க கடைக்கு போவது போல் போகிறார். 

ஓவர் வெயிட் உடம்புக்கு ஆகாது தல. மோகன்லால் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அந்த Effect வருகிறது. அப்படி ஒரு குண்டு + தொப்பை. வழமை போல் நடராஜன் போல் நடக்கிறார், கோட், சூட், கண்ணாடியுடன் வருகிறார். அரை குறை ஆடைகளுடன் பெண்கள், கொலை, யுவன் என அவரின் படங்களின் இருக்கும் அத்தனை சமாச்சாரங்களும் இருக்கிறன. யுவனின் பாடல்கள் சில பரவாயில்லை ஆனால் அதை படம் பிடித்த விதத்தில் எங்களை சீ என வைத்து விட்டார்.




கடைசியாக ஒன்றே ஒன்றுதான் கேட்டுகொள்கிறேன் தலயிடம்... இனி மேல் கோட், சூட், கண்ணாடியை நம்பி நடிக்க வேண்டாம். கதையை நம்பி நடியுங்கள். முக்கியமாக பில்லா 3 எடுத்து எங்களை கொலைகாரன் ஆக்க வேண்டாம்!!

1 comment:

  1. /// பில்லா 3 எடுத்து எங்களை கொலைகாரன் ஆக்க வேண்டாம்!!///

    விரைவில் பில்லா 3 குறித்த விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

    ReplyDelete