பஞ்சா
தமிழில் வருகிற அதிகாமான படங்கள் தெலுங்கில் இருந்து சுடப்படுவதால் தெலுங்கு படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தெலுங்கு படங்களை Dowenload செய்து பார்ப்பேன். அப்படி பார்த்த படங்கள் பல, இதை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற காரணம் "நடராஜன்" அடுத்ததாக நடிக்கும் படம் இது என்ற கருத்து நிலவுவதால் உங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன்!!
நடிகர்கள்: பவன் கல்யான் (நடராஜன்), அடவி சேஷ்(ஆர்யா), சார ஜேம்ஸ் (நயன்தாரா), அஞ்சலி லாவண்யா(தாப்சீ), ஜக்கி ஷரப் (கிஷோர், அதுல் குல்கார்னி(அதுல் குல்கார்னி) மற்றும்படி விஷ்ணுவர்தனின் அதே தொழிநுட்ப அணிதான் இங்கும்.
பவன் ஜாக்கியிடம் அடியாளாக வேலை செய்கிறார், அப்படியே சாராவையும் லவ் பண்ணுகிறார். இப்போ ஜாக்கியின் மகன் வெளி நாட்டில் இருந்து வருகிறார் வந்ததும் சும்மா இல்லாமல் பவனின் சிநேகிதியிடம் வம்புபன்ன அவர் இறந்து விடுகிறார். இதை பார்த்த பவன் அவரை போட்டு தள்ள, இவரை போட ஜக்கி ஆட்களை அனுப்புகிறார். தன் உயிரை பாதுகாத்து கொள்ள பவன் சாராவின் கிராமத்துக்கு செல்கிறார், அங்கு அடிக்கிறார், ஆடுகிறார், பாடுகிறார் எல்லாம் செய்கிறார்!!! படத்தை முடிக்க வேணும் என்பதற்க்காக,கடைசியில் வில்லனின் ஆட்கள் சாராவை கடத்துகிறார்கள். கடைசியில் இவர் ஜாக்கியை போடுவதுடன் படம் சுபம்!!
இந்த படத்தை பார்த்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் சென்றது!! பார்த்து கொண்டு இருக்கும் போதே நித்திரை கொண்டு விட்டேன். அவ்வளவு சிறந்த படம் நித்திரை வராதோர்க்கு. இதில் உருப்படியான, ரசிக்க கூடிய சில விடயங்கள் இருந்தன. யுவனின் இசை. பாடல்கள், பின்னணி இசை என்று புகுர்ந்து விளையாடி விட்டார். மற்றது ஒளிப்பதிவு. முதல் முறையாக விஷ்ணுவர்த்தன் நிரவ் ஷா விடம் இருந்து வேறு ஒருவரிடம் சென்று இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரின் ஒளிப்பதிவை நான் ரசித்தேன். மற்றது, பிரேமானந்தத்தின் காமெடி. இங்கு சந்தானம் என்றால் அங்கு அவர் போல. பின்னுகிறார். அந்த, பாப்பாராயுடு பாடலில் செம கலக்கல்.
மற்றும் படி ஒன்றும் இல்லை. படம் தொடங்கும் பொது ஒரு விறு விறுப்பு.... இடைவேளை முடிந்து போக கூடாது என்பதற்க்காக இடைவேளைக்கு முன் ஒரு பட படப்பு.... படத்தை முடிக்க வேணும் என்பதற்க்காக கடைசியில் ஒரு பத பதப்பு..... அவ்வளவுதான்!!
ஆனால், நடராஜனுக்கு இது கொஞ்சம் சரி வரும் போல் இருக்கிறது. காரணம், இதிலும் கண்ணாடி போடலாம், கோட், சூட் போடலாம் மற்றது பெயருக்கு ஏற்ற மாதிரி நல்லா நடக்க சந்தர்ப்பம் உள்ளது. பார்ப்போம் நடராஜன் பவன் மாதிரி நடிகிறாரா அல்லது பெயருக்கே ஏற்ற மாதிரி நடிகிறாரா என்று.




No comments:
Post a Comment