மறுபடியும் தோணியின் தலைமையில் இந்திய அணி இங்கு வந்துள்ளது.
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக இங்கு வந்து விளையாடி கிண்ணத்தையும் வென்று சென்று இருக்கிறது. ஆனால் நன்கு பழக்க பட்ட மைதானங்களில் மாத்திரமே விளையாடி உள்ளது. இந்த முறை முற்றிலும் பழக்க மில்லாத இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மைதானத்தில் விளையாட உள்ளது(இரண்டு போட்டி) அத்துடன் பல்லேகலயிலும் ஒரு போட்டி உள்ளது மிகுதி இரு போட்டியும் நன்கு பழக்க பட்ட கொழும்பில் விளையாட உள்ளது.
இலங்கை அணியை பொறுத்த வரை, தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறது மற்றும் விளையாட இருக்கிறது. அவர்களின் மிக பெரிய பலம் என்றால் சொந்த மைதானத்தில் விளையாடுவது என்பதுதான். அத்தோடு, பாகிஸ்தான் அணியுடனான வெற்றி இன்னும் தென்பை தரும். அணியில் உள்ள சிரேஷ்ட வீரகளுடன் இளம் வீர்களும் கலக்குகிறார்கள். முக்கியமாக மகெல மற்றும் சங்க நல்ல போர்மில் இருக்கிறார்கள். அந்த நிலை தொடர்ந்தால் இதிலும் வெற்றி வாகை சூடலாம்.
இந்திய அணியை பொறுத்த வரை, அவர்கள் தொடர்ந்து ஆறு வாரமாக ஓய்வில் இருக்கிறார்கள். அது சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் போகலாம். இந்திய அணிக்கு உள்ள பெரிய பலவீனமே அதன் பந்து வீச்சுதான். ஜாகிர்கான் மற்றும் யாதவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தால் இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கலாம். ஏன் என்றால் இந்திய அணியின் துடுப்பாட்டம் வழமை போல் பலமாக உள்ளது. சேவாக், காம்பிர், தோணி, ரைனா, கோலி, ஷர்மா மற்றும் பதான் உள்ளார்கள்.
இதுவரை இந்திய அணி இங்கு 76 போட்டிகளில் விளையாடி 34 இல் வெற்றியும் 33 இல் தோல்வியும் அடைந்து உள்ளது. ஆக, இரு அணிகளும் சம வெற்றி தோல்விகளுடன் உள்ளது. ஆனால் இறுதியாக 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற போட்டியில் 3-2 என்ற அடிபடையில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடந்த 5 போட்டிகளில் இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வென்று உள்ளது. நாளை முதல் போட்டி அம்பாந்தோட்டையில் தொடங்க உள்ளது. பார்ப்போம் தோணியின் தலைமையில் இந்திய அணி சிங்கத்தை வீழ்த்துகிறதா அல்லது வீழ்கிறதா என்று.

No comments:
Post a Comment