23 June 2012

பணக்கார போலிச்சாமி



இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் 2009ம் ஆண்டின் சம்பளம் 15 கோடி ரூபாய். அதே ஆண்டு, “கிளு கிளு’ சாமியார் நித்யானந்தாவின் வருமானம் 90 கோடி ரூபாய்!


சிலை விற்பனை: நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான ராஜேஷ் கிருஷ்ணன் என்ற நித்ய சேவகானந்தா என்பவரின் பெயரில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டு ஆர்டே நகரில், “நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 2007ல், துவக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு சாமி சிலைகள், கவரிங் நகைகள், ருத்ராட்ச மாலைகள், விதவிதமான காவி மற்றும் பல வண்ண ஆடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, அமெரிக்காவில் வசித்து வரும் பக்தி மிக்க இந்தியர்கள், நித்யானந்தா சீடர்கள் மற்றும் வெளிநாட்டவரிடம் விற்பனை செய்து வந்தது. இதில், அனைத்து பொருட்களும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்பட்டன. உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலை, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும். இதன் மூலம், 2009ல், அவர் 12 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.


யோகா கறவை: உள்நிலை விழிப்புணர்வு (இன்னர் அவேக்கனிங்) என்ற, இருபத்தோரு நாள் தியான பயிற்சி நடத்தியதன் மூலம், 8.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும், இந்திய ரூபாய் மதிப்பின்படி, மூன்று லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளனர். அடுத்தபடியாக, ஆனந்த வாழ்க்கைக் கலை (லைப் பிளிஸ் இன்ஜினியரிங்) என்ற, தியான நிகழ்ச்சி நடத்தியதன் மூலம், 7.20 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு நபரும், நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவை தவிர, “ஆனந்த ஸ்புரணா புரோகிராம்’ மற்றும் “நித்யானந்த ஸ்புரணா புரோகிராம்’ ஆகிய தியான நிகழ்ச்சிகள், பாத பூஜை, குருபூர்ணிமா நிகழ்ச்சிகள், சில பொருட்கள் விற்பனை இவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் நித்தி. இவ்வாறு, ஒட்டு மொத்தமாக, 2009ம் ஆண்டில் மட்டும், 87 கோடியே, 99 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து உள்ளார். இது வெறும், ஒரு ஆண்டிற்கான சம்பாத்தியம் தான்! கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்கள், இந்த கணக்கைத்தான் கூறுகின்றன. இது தவிரவும் வேறு வருமானம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.


நித்தியின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 32 கோடி ரூபாய்! வெளிநாடுகளில், நித்யானந்தா பல்வேறு வழிகளில் சம்பாதித்த, 32 கோடி ரூபாய் பணத்தை, தனிப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். இது குறித்த ஆவணங்கள், “தினமலர்’ நாளிதழுக்கு கிடைத்துள்ளன.







தியான நிகழ்ச்சிகள்: நித்யானந்தா, தனது தியான பீடத்தின் சார்பில், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான தியான பீடக் கிளைகளைத் திறந்து அவற்றின் மூலம் பல்வேறு தியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு, ஒவ்வொரு நபரிடம் இருந்தும், ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணமாக வ‹லிக்கப் பட்டது. அந்த பணம், இந்தியாவில் உள்ள ஒரு வங்கி கணக்கில் சேகரிக்கப்பட்டன. அந்த கணக்கு அவர் பெயரிலேயே, அவரது தனிப்பட்ட கணக்காக இயக்கப்பட்டது. “தினமலர்’ நாளிதழுக்கு கிடைத்த ஆவணங்கள், ஒரு வங்கி கணக்கை சார்ந்தவை மட்டுமே. அவரிடம், இதுபோன்று வேறு கணக்குகள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

கிடைத்த விவரங்களின் படி:

* கணக்கு குறித்த தகவல்கள் கடந்த 2006 முதல் 2010 வரையிலானவை.

* கணக்கு, தனியார் வங்கி ஒன்றில், நித்யானந்தாவின் பெயரில், அவரது தனிப்பட்ட கணக்காக இயங்கியது.

* குறிப்பிட்ட காலத்தில், அதில் 32 கோடி ரூபாய் வரை இருந்தது.

* அனைத்து வரவுகளும், டாலர்/யூரோ போன்ற அன்னிய செலாவணியில் வந்து உள்ளன.

* 90 சதவீத வரவுகள், பத்தாயிரம் டாலருக்கும் குறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க வருவாய்த் துறையின் விசாரணை குடைச்சலை தடுத்துள்ளார் நித்தி.

* பெரும்பாலான வரவுகள், கொத்துக் கொத்தாக, குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் அவரது சீடர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம், “செக்’ ஆக வாங்கி ஒரே நாளில் கணக்கில் செலுத்தி உள்ளனர். இவ்வகையில், 2006, ஏப்ரல் 26ம் தேதி முதல், 2010, ஏப்ரல் 5ம் தேதி வரை, மொத்தம் 32 கோடியே, 10 லட்சத்து, 92 ஆயிரத்து 735 ரூபாய் வரவாகி உள்ளது. இதில், 2010, மார்ச் 2ம் தேதி, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக, செய்தி வெளியானதற்குப் பின்னும் கூட; மார்ச் துவங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரை, 1.24 லட்சம் டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிடதியில் 11: பிடதி ஆஸ்ரமத்தின் பெயரில், நித்யானந்தாவுக்கு, மொத்தம் 11 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றில், “ஜாயின்ட் அக்கவுன்ட்டாக’ அவரது தம்பியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு, பிடதியில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிக் கணக்குகள் உள்ளன. நித்யானந்தா தியான பீடம், தியான பீட அறக்கட்டளை, நித்யானந்தா பவுண்டேஷன், நித்யானந்தேஸ்வர தேவஸ்தானம் ஆகியவற்றின் பெயரில், இந்த வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றை செயல்படுத்தும் நபர்களாக, அந்த கணக்குகளில், நித்யானந்தாவின் பெயரும், நித்ய ஈஸ்வரானந்தா என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளன. நித்ய ஈஸ்வரானந்தா என்பவர், “நித்தி’யின் தம்பி. இந்த வங்கி கணக்குகள் 2003-2007ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டு உள்ளன.

நன்றி : தினமலர்

17 June 2012

அப்பா 


 "முதியோர் இல்லம்" Board  கண்ணில் பட்டதும் காரின் வேகம் குறைத்து நிறுத்தினான் கார்த்திக்.

கதவு திறந்து கைகொடுத்து அப்பா கீழிறங்க உதவினான். அதற்குள் முன்பக்கம் இருந்த மகன் இறங்கியிருந்தான். கொஞ்சம் தயக்கமாகவே தன் மகனுடனும், வயதான அப்பாவுடனும் உள்ளே நுழைந்தான்.

அப்பா சடகோபன் முகத்தை தற்செயலாக பார்ப்பதுபோல் பார்த்தான் கார்த்திக். முகத்தில் இறுக்கம் மண்டிக்கிடந்தது. சோகமா, கலக்கமா என்று கண்டுணர முடியாத கேள்விகள் முகத்தில் வரைபடங்களாகத் தெரிந்தன.










"வாங்கோ..." விடுதி நிர்வாகி வரவேற்றார். "அப்பாவா..." கேட்டுக்கொண்டார்.

நேற்று வந்து நிர்வாகியை சந்தித்து அட்வான்ஸ் பணம் கொடுத்துப் போயிருந்தான். அப்பாவை சேர்ப்பதில் தொடங்கி, மாதாந்த கட்டணம் வரை தெரிந்து வந்திருந்தான்.

அப்பா பாவம். வாயில்லாப்பூச்சி. அம்மா இருந்தவரையில் அளந்து பேசுவார். அம்மா போனபின் நிஜமான வாயில்லாப்பூச்சியாகவே மாறியிருந்தார். ஆனாலும் அப்பாவை பார்த்தால் மைதிலிக்கு ஆகிறதில்லை.

"எப்பப்பாருங்க உங்கப்பா மூக்கை சீந்திண்டு... சில சமயம் சுவரில்கூட மூக்கு ஒழுகலை தடவி வைக்கிறார்..." புகார் பட்டியலை அவ்வப்போது அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்பாவுக்கு சோதனையாய் வந்து சேர்ந்திருந்த வறட்டு இருமல் மைதிலியின் தூக்கத்தை தற்காலிகத் தடை செய்தது. அதுகூட, அவள் புகாருக்கு காரணமாக இருக்கலாம்.

"இதோ பாருங்க. இப்ப நல்ல ஹோம்லாம் வந்தாச்சு. நாமா வீட்ல வச்சிப் பார்த்தாலும் அப்படிக் கவனிக்க முடியாதுன்னு சொல்றாங்க. இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில தான் புதுசா ஆரம்பிச்ச அந்த ஹோம் இருக்கு.. என் பிரண்ட் கோமதியோட மாமனார் இப்ப அங்கேதான் சவுக்கியமா இருக்கார். மாசம் Fees மூவாயிரம் வாங்கறாங்களாம். எதுக்கும் ஒரு நடை எட்டிப்பார்த்துட்டு வாங்களேன்." என்று மைதிலி ஒருநாள் தடாலடியாக சொன்னபோது அவனால் அவளை முறைக்கத்தான் முடிந்தது.

அடுத்தடுத்த இரவுகளில் "நான் சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணிப்பாருங்க" என்று சொல்லத் தொடங்கி அவனை `மூடுஅவுட்' பண்ணினாள்.

அவன் பக்குவமாய் சொல்லிப்பார்த்தான். "நம் காதலைக்கூட கண்ணியமாய் ஏற்றுக் கொண்ட அப்பாவை எப்படி விடுதிக்கு...? உன் எண்ணமே தப்பு..." பேசிப்பார்த்தான். எடுபடவில்லை.

அடுத்து வந்த இரவுகளில் புரண்டு படுத்தாள். 'Night Lamp' மெல்லிய ஒளியில் முதுகு காட்டி தூங்கத் தொடங்கி, அவனது நிம்மதியான தூக்கத்துக்கு 'வேட்டு' வைத்தாள்.

அப்போதும் அப்பாவை தாங்கினான். படிக்கிற காலத்தில் அவனுக்கு பிடித்ததை படிக்கச்சொன்ன அப்பா! அவன் விருப்பத்துக்கு மாறாக எதையுமே செய்யாத அப்பா! மைதிலியை காதலிப்பதாக சொன்னபோது கூட, மகனின் பிரியத்துக்கு மறுப்பு சொல்லாமல் அம்மாவின் முணுமுணுப்பையும் தாண்டி(என்ன குலமோ..என்ன கோத்திரமோ...?) திருமணம் செய்து வைத்த அப்பா.

மைதிலியும் மாமனாரிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள், மாமியார் இருக்கும்வரை.

அப்புறமாய் அவரை கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்தபோது முதுமை வாசனை அவளை சங்கடப்படுத்தியது.

முதுமை மாமனாருக்குள் பலவீனமாய் இருமல் கொண்டு வந்தபோது... தரையில் கிடந்த `கோழை'க்கு முதல் நாள் சின்னதாய் முகம்

சுளித்தாள்.நாளடைவில் அவரை பார்க்கும்போதெல்லாம் முகச்சுளிப்பு நிரந்தரமாயிற்று. ஒரு இரவின் நெருக்கத்தில் அதை கணவனின் காதிலும் போட்டுப்பார்த்தாள்.

ஆனால் இது விஷயத்தில் மனைவியை சமாளித்து விடலாம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்ட கார்த்திக் ஏமாந்து போனான்.

ஒரு கட்டத்தில் "மனைவியா, அப்பாவா" என்று முடிவெடுக்கிற அளவுக்கு நிலைமை விபரீதமானது. பகலிலும் பாராமுகம் காட்டினாள். நினைத்தது நடக்காத ஆத்திரம் டைனிங் டேபிளில் பாத்திரங்களின் `தட்...தட்...' ஓசையிலும் எதிரொலித்தது. இனியும் அப்பா விஷயமாய் மனைவியிடம் மல்லுக்கட்டினால் அதனால் உறவுச்சிக்கல் வரை போய் மகனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடக்கூடும்.

அப்பாவுக்கு இவன் ஒரே வாரிசு. இவனுக்கு மகன் மகேஷ் ஒரே வாரிசு. 6-வது படிக்கும் மகேஷ் முழுக்க அம்மா பிள்ளை. அதே நேரம் தாத்தா செல்லம்.

ஆனாலும் நோய்த் தொற்றை காரணம் காட்டி மகேஷை தாத்தாவிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டாள் மைதிலி. பேரனின் அருகாமை கூட தவிர்க்கப் பட்ட அப்பா, அனாதை போல் பரிதாபப் பார்வையுடன் வீட்டில் நடமாடியதை ஜீரணிக்கத் திணறினான் கார்த்திக்.

ஜன்னல் கதவு திறந்திருந்தும் மூச்சு முட்டிய ஒரு மாலைப் பொழுதில் அப்பாவிடம் மனம் திறந்தான். "மாச வாடகை மூவாயிரம்ப்பா. நல்ல வசதி. வாரம் ஒரு தடவை பார்க்க வந்துடறேன்" என்றான். சொல்லும்போதே குரல் தழுதழுப்பில் உள்வாங்கியது.

அப்பா மவுனமாக பார்த்தார். பேசவில்லை. பார்வையில் இருந்த அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு, அப்பாவின் சொற்ப உடமைகளையும் எடுத்துக்கொண்டு... இதோ முதியோர் இல்லம்.

"Form Fill up பண்ணிட்டேன் சார். படிச்சுப் பார்த்துட்டு ஒரு Sign போட்டுடுங்க."

விடுதி நிர்வாகி சொல்ல, `எஸ்.கார்த்திக்' போட்டான்.

"அப்பா..." - மகன் மகேஷ் அழைத்தான்.

"தாத்தாவை ஹோம்ல விடத்தானே வந்திருக்கிறோம்."

"ஆமாப்பா..."

"தாத்தாவை விட்டுட்ட பிறகு அவர் இன்ஷியல் மட்டும் உனக்கு எதுக்குப்பா? இன்ஷியல் இல்லாம ஸைன் போடுப்பா..."

கடவுளே குழந்தையாக வந்து பொட்டில் அறைந்தது போலிருந்தது. `என் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருந்த அப்பாவை தூக்கிப் போட்டுவிட்டு அவர் இனிஷியலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள எனக்கென்ன தகுதி இருக்கிறது?' அதிர்ச்சி விலகாமல் அப்பாவை நோக்கினான்.

"வீட்டுக்குப் போலாம்பா..." என்றான்.

அப்பா இப்போது அமைதியாய் இருக்கவில்லை. பேசினார். "கார்த்திக்... உங்கம்மா எப்ப போனாளோ அப்போது முதலே தனிமையை ரொம்ப `பீல்' பண்றேன். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே கணவன்-மனைவி நேசிப்பில் தான் இருக்கு. அதை நான் வாழ்ந்து பார்த்தவன். ஆனால் அதே சந்தோஷம் என் மூலம் உனக்கு தடைபடறதை உன்அப்பாவா என்னால் நிச்சயம் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. அதனால இருக்கிற மிச்சம்

மீதி நாட்களை இங்கேயே கழிச்சிடறேன். தயவுசெய்து தடுக்காதே."

அப்பா அந்த இயலாமையிலும் மகனைப் பார்த்து கைகூப்ப முயல...

அதற்குள் முந்திக்கொண்டு அந்தக் கையைப் பிடித்துக்கொண்ட கார்த்திக், குழந்தை மாதிரி அழத் தொடங்கினான்.

விடுதி நிர்வாகி அவரையும் மீறி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

நன்றி : கே.பாலசுந்தரம்

16 June 2012

சகுனி Vs பில்லா 2


சினிமா என்பது, தமிழ்நாடு அல்ல இந்தியாவையும் தாண்டி இலங்கையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது இப்போ. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை அதற்கேற்ப்ப ரசிகர்கள், அவர்கள் (ரசிகர்கள்) செய்யும் வேண்டத்தக்க, வேண்டத்தகாத  செயல்கள் எல்லாம் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது....

சில நேரங்களில் சில நட்சத்திரங்களின் படங்கள் ஒன்றாக மோதும் போது இரு நடிகர்களின் ரசிகர்கள் மாத்திரம் அல்ல குறிப்பிட்ட நடிகர்களை பிடிக்காத ரசிகர்களும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் ஒன்று சேர்வார்கள், "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற கோட்பாடு போல?










             Vs











   

இம்முறையும் இரண்டு படங்கள் மோத இருக்கின்றது முதலாவது தல என்று அழைக்கப்படும் அஜித்தின் "பில்லா 2". பில்லாவின் தொடர்ச்சியாக வரும் படம் மற்றது மங்காத்தா என்ற வெற்றி படத்தை தொடர்ந்து வரும் படம் என்பதால் எதிர் பார்ப்பு கூடி இருக்கிறது. மற்றது, இப்போது தமிழ் நாட்டில் மாத்திரம் அல்ல ஆந்திராவிலும் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் கார்த்தியின் "சகுனி". தொடர்ந்து இவரின் படங்கள் வெற்றி மட்டும் அல்ல வசூலையும் பெற்று வருகிறது.





பில்லா 2  வை பொறுத்த வரை அஜித்தின் ரசிகர்களே பலம். அவரின் சமீபத்திய படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர்கள் ரொம்ப உற்ச்சாகமாக இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல அவரின் சினிமா வாழ்க்கையில் இந்த படம்தான் அதிக விலைக்கு விலைப்பட்டு இருக்கிறது. அதனால் பெரிய எதிர் பார்ப்பு உள்ளது. பாடல்கள் வந்து அஜித் ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறது என்று சொல்ல முடியும், ஆனாலும் என்னை பொறுத்த வரை இந்த முறை யுவன் ஏமாற்றி விட்டார். பார்ப்போம் பின்னணி இசையில் எப்படி கலக்க போகிறார் என்று. ஏன்னென்றால் அவரின் தகப்பனாரை போல் இவரும் பின்னணி இசையில் கலக்குபவர். மற்றது அஜித்தின் படங்கள் எப்போதும் தனியாக தான் வரும் மற்றைய நடிகைகளின் படங்களுடன் வராது. இந்த முறை சகுனியுடன் மோத இருக்கிறது. பார்ப்போம் மோதி ஜெயிக்கிறாரா அல்லது  வழமை போல் தனிய வருகிறாரா என்று.





சகுனியை பொறுத்தவரை கார்த்தியின் ரசிகர்கள் அத்தோடு அண்ணனின் ரசிகர்கள் என்பது மட்டும் அல்லாது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி ரசிக்கும் நடிகர். அதனால்தான் ஆந்திராவிலும் அவரால் கோலாட்ச்ச முடிகிறது. எல்லோரும் பார்க்க கூடிய வகையில் படம் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதே சகுனியின் மற்றைய பலம். இந்த முறையும் G.V.பிரகாஷ் பாடல்களை வித்தியாசமாக தர முயன்று இருக்கிறார். கேட்க கூடிய வகையில் இருக்கிறது.

பில்லா ஒரு Gangster படம். அது எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காரணம், ஆபாசம் மற்றும் வன்முறை காரணமாக A தர சான்றிதலே கிடைத்து இருக்கிறது.












சகுனியை பொறுத்த வரை அதில் காதல் நகைச்சுவை சென்டிமென்ட் ஆக்க்ஷன் எல்லாமே இருக்கும். மற்றது, இந்த படம் ஒரு அரசியல் படம் மாதிரி இருப்பதால் எதிர் பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. பில்லா படத்தை விட 1 கோடி குறைவாகவே தமிழ் நாட்டில் விலை போய் இருப்பது தல ரசிகர்களை அதிர்ச்சிக்கும் கார்த்தி ரசிகர்களை ஆச்சரியத்துக்கும் உள்ளக்கி இருக்கிறது. பார்ப்போம், யாருக்கு யார் சகுனி என்று!



15 June 2012

இந்து சமுத்திரத்தின் முத்து

இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கைத் தீவு பல்லின மக்களையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாடு. பசுமை நிறைந்த இயற்கை அழகும், பெறுமதி மிக்க இயற்க்கை வளங்களும் நிறையப் பெற்ற இன் நாட்டை நாட்புறமும் எழில் கொஞ்சும் வெண் கடற்கரைகள், தேயிலை தோட்டங்கள் நிறைந்த குறிஞ்சிப் பரல்கள், வளம் கொழிக்கும் வயல் பரப்பு, பாரிய நீர் தேக்கங்கள், உயிரியல் பல்வகைத் தன்மை உடைய வனங்கள், சரணாலயங்கள் எனப் பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. விடுமுறையில் செல்பவர்களும் உள்ளூர் மக்களும் பார்த்து, தங்கி, அனுபவித்து மகிழ்வதற்கு கண்கவர் இடங்கள் இந்த குட்டித் தீவில் உள்ளன.

அவற்றில் சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில்,

சிகிரியா
 























இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கற் பாறையில் அமைக்கபட்ட ஒரு கோட்டையாகும். இது, பல வருடங்களுக்கு முன்பாகக் காசியப்ப மன்னனினால் கட்டப்பட்டது. நாற்புறமும் பச்சை பசேலென வயல் வெளிகளும், நீர்த் தேக்கங்களும் காணப்படும் இப்பாறையின் உச்சியில் சிங்கத்தின் முகத்தைப் போன்ற வாயிலைக் கொண்டதாக இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள தாமரை மலர்களை ஏந்திய பெண்களின் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. வியக்க வைக்கும் கட்டடக் கலை நுட்பம், அதன் அமைவிடம், குகை ஓவியங்களின் கலைத் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக சிகிரியாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சிக்கு சென்றதும் உங்கள் கண்கள் என்றுமே பாத்திராத ரம்மியங்களை காணப் போவது நிச்சயம்.
 




















இலங்கையில் இருந்தாலோ அல்லது வந்தாலோ இதை பார்க்க தவற வேண்டாம்.
 
 

12 June 2012

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை  

 

 











 

 

 

 

 

01) ஜஸ்லாந்து : இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம்  வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்)

 

02) எகிப்து : இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள். 

 

03) செக் குடியரசு : சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

 

04) நைஜர் : இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும்குடி உரிமைகள் பறிக்கப்படும்.

 

05) இங்கிலாந்து : சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

 

06) சீனா : கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால்நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

 

07) அர்ஜெண்டினா :சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும்
வரை வேறு வேலை தரமாட்டார்கள்.


 

எல்லாம் சரி...... இலங்கை, இந்தியாவில்? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'Gift' ஆக வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம்வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'

  

 

 

 

 

 

 

 

 

 

 

அதனால்தான் எங்களை யாராலும் அசைக்க முடியாமல் இருக்கு.....

நன்றி : தமிழ் வளர்ப்போம்

 

 வினோதமான வீதிகள்










10 June 2012

இந்துவின் மைந்தர்கள்

At Fingara Club
எல்லோர் வாழ்கையிலும் பாடசாலை நாட்கள் என்பது மறக்க முடியாத ஒன்று, அதே போல் நண்பர்களும் மறக்க படாதவர்கள். உண்மையான நட்பு என்பது பாடசாலை மாணவர்களிடம் தான் இருக்கிறது என்று என் முகாமையாளர் சொல்லவார், அதில் அர்த்தமும் உள்ளது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக கூடிய நட்பு. 

நான் கொழும்பு இந்துக்கல்லூரியில் எனது உயர் தரத்தை 2002 ஆம் ஆண்டு முடித்தேன், அத்தோடு சில நண்பர்களின் தொடர்பும் விடு பட்டு சென்றது. ஒரு சிலர் அண்மையில் இருப்பதால் கதைக்க கூடியதாக இருந்தது, மற்றும் சிலர் என்னோடு வேறு படிப்பு படித்ததால் கதைக்க கூடியதாக இருந்தது. பல பேர் வெளிநாடு சென்று விட்டதால் அவர்களில் சில பேருடன்  Facebook கின் உதவியுடன் தொடர்பை வைத்து கொண்டு இருக்கிறேன்.....

ஆனாலும் எல்லோரும் ஒன்றாக சந்திக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைய வில்லை. அதை என் நண்பர்களில் சில பேர் செய்தார்கள் "Re Union Hindu College 2002". என்னை போல் எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்து இருந்த அந்த நாள் June 02, வேலை பளு காரணமாக 6  மணிக்கே என்னால் வேலையே விட்டு வர முடிந்தது. வீடு வந்து ஆயுத்தம் ஆகி கொண்டு புறப்பட்டேன். Bus சில் சென்று Boralesgamuwa வில் இறங்கி Three wheel லில் அங்கு இருந்து சென்றேன். போகும் போதே ஒரு வித ஆவல்... உள் செல்லும் பொது என் நண்பன் ஒருவன் கண்டான்... இருவரும் நலம் விசாரித்து கொண்டு, எங்கள் Hallலுக்கு சென்றோம். அங்கு எல்லோரையும் ஆரத்தழுவி எங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினோம். பிறகு எங்கள் கடந்த கால வாழ்க்கை, நிகழ் கால வாழ்க்கை மற்றும் எங்கள் பாடாசாலை வாழ்க்கையை மீட்டி பார்த்தோம்.

எனக்கு ஆச்சரியம் ஒரு சில பேர் UK யில் இருந்து வந்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் 1983 கலவர ஆண்டில் பிறந்த படியால் என்னவோ ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இன்னும் திருமணம் முடிக்க வில்லை. ஏதேனும் சாபமோ?


பிறகு சில போட்டிகள், அதற்கு பிறகு நாங்கள் 2.00 மணி வரை அங்கு இருந்தோம்.  மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.வீடு வரும் போது இரவு 2.30 தை தாண்டி விட்டது. என்றும் மாறாத பசுமையான நினைவுகள் மனதில்.......