ஒரு அவசர வேலை காரணமாக கண்டி போக வேண்டி இருந்தது. அதனால் அறக்க பறக்க வெளிக்கிட்டு கண்டி போகும் பஸ்சில் ஜன்னல் ஓரம் இருந்தேன். இன்று ஞாயிற்று கிழமை என்ற படியால் பஸ் ஸ்டாண்டில் பெரிதாக சன நடமாட்டம் இல்லை.
பஸ்சுக்குள் அதிகாலை என்ற படியால் இருக்கைக்கு அளவாக பயணிகள் இருந்தார்கள். ஒரு சில இருக்கைகளை தவிர. தண்ணி விப்பவர்க்ளும், வடை போன்ற சிற்றுண்டி விப்பவர்களும் அடிக்கடி வந்து சென்றார்கள். பஸ் புறப்பட சில நொடிகள் இருக்கும் போது பாவாடை, தாவணியில் ஒரு பெண் குலுங்க குலுங்க ஓடி வந்தாள். அந்த அதிகாலை வேளை மெல்லிய சூரிய வெளிச்சத்தில் தேவதை போல தெரிந்தாள் எனக்கு. ஓடி வருவது நான் போகும் பஸ் ஐ நோக்கி. என் மனம் பதை பதைத்தது என் பக்கத்தில் இருப்பாளோ அல்லது வேறு இருக்கையில் அமர்வாளோ என்று. என்னை அதிகம் ஜோசிக்க விடாமல் என் இருக்கை இருக்கும் பக்கம் வந்தாள், இருந்தாள். என்னை ஆசுவாச படுத்தி கொண்டு சிறிது நேரம் இருந்தேன்.
பஸ் புறப்பட தொடங்கியது. ந ந ந ந நா நா ந ந ந என்று என் தொலைபேசி தொல்லை செய்தது. நான் சயிலன்ட் இல் போட்டு விட்டு, என்னை தன் அழகால் கிறங்க வைத்தவளிடம் எப்படி பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தான். மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.
சிறிது நேர அமைதியின் பின், எங்கே போறிங்க என்று கேட்டேன். அவளும் கண்டி என்றாள். என்ன விடயமாக போகிறிங்க என்று அடுத்த கேள்வியை கேட்டேன். பேராதெனிய கம்பசில் படிக்கிறாளாம் என்று பதில் சொன்னாள். அவளும் இன்னை பற்றி கேட்டு கொண்டாள். இப்படியே பரஸ்பரம் கதைத்து கொண்டு சென்றோம். என்ன பெயர் என்று பல நிமிடங்களுக்கு பிறகுதான் கேட்டேன். ரூபிகா என்றாள்! மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.
இப்படியே கதைத்து கொண்டு இருக்கும் பொழுது உங்க போன் நம்மரை தர முடியுமா என்றேன் ஒரு வித பதை பதைப்புடன். ஜோசித்து விட்டு சரி என்று தன் நம்பரை சொன்னாள்.நான் எனது போனை எடுத்து சேவ் பண்ண போனேன். அவள் சொன்னாள், 077-57 ந ந ந ந நா நா ந ந ந மீண்டும் அடித்தது என் போன். வாயில் வந்த கேட்ட வார்த்தைகளை அடக்கி கொண்டு போனை என் காதில் வைத்தேன்.
டேய் மூதேவி எங்கடா இருக்கிறாய்??? படம் தொடங்க இன்னமும் 10 நிமிஷம்தான் இருக்கு என்றான் என் நண்பன். சுற்றும் முற்றும் பார்த்தேன் பஸ்சுக்கு பதில் வீடு, இருக்கைக்கு பதில் கட்டில், அவளுக்கு பதில் வீட்டு சுவர். இதோ வாறண்டா என சொல்லி போனை கட் பண்ணி விட்டு, அறக்க பறக்க பாத் ரூம் நோக்கி ஓடினேன்!!!

Kandykkuu poringa ok. Aana enkirunthu Bus aarineenga?
ReplyDeleteBus Stand தான்!!! ஆனால் எழுத வில்லை :)
Delete