06 October 2012

தீவு VS தீவுகள்

கிரிக்கெட் ரசிகர்களிடையே சில தொடர்கள் அதிக எதிர் பார்ப்பை ஏற்றி விடும். அந்த வகையில் உலக கிண்ணமும் ஒன்று ஆனால் இது இருபதுக்கு இருபது தொடர். நடப்பது இலங்கையில்.கடந்த இரு வாரங்களாக கதைக்கபட்ட, பார்க்கபட்ட தொடர் நாளைய இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது. இந்த முறை போட்டியை நடத்தும் இலங்கை அணியும் கரிபியன் தீவுகள் என அழைக்கப்படும் மேற்கிந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.



இலங்கை அணியை பொறுத்த வரை, சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாட போகிறது. அத்துடன் பலம் கொண்ட துடுப்பாட்ட வரிசையையும் பந்து வீச்சையும் தன்னகத்தே வைத்துள்ளது. இலங்கை அணியின் பலமே சுழல் பந்து வீச்சில் இருக்கிறது. அவர்கள் ஓட்டத்தை கட்டுபடுத்துவதுடன் விக்கட்டுகளையும் எடுக்கத்தவருவதில்லை. அதே போல வேக்கப்பந்து வீச்சாளர்களும் தங்கள பணியை திறம்பட செய்கிறார்கள்.

மேற்கிந்திய அணியும் அதே போல துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அவர்களின் பலமே Gayle எனும் தனிமனிதன்தான். அவர் நின்று அடித்து ஆடினார் என்றால் பின் வருவோர்களும் அந்த பணியை செய்வன செய்வார்கள்.

இரு அணிகளும் முதன் முறையாக T20 போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார்கள். இலங்கை அணி Gayle லை சுப்பர் 8 போட்டியில் வீழ்த்தியது போல் வீழ்த்தினால் மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மஹாலே சொன்ன "நாங்கள் அவரை பற்றி கவலை பட வில்லை" என்று சொல்வதிலேயே இருக்கிறது!! அவரின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறளவுக்குஒரு பீதியை கிளப்பி இருக்கிறார் அரை இறுதியில் அவுஸ்திரலியாவுக்கு எதிராக ஆடிய ருத்திர தாண்டவத்தின் மூலம்.





இலங்கை அணியில் ஆரம்ப துட்டுப்பட்ட வீரர்கள் சிறப்பான ஒரு அடித்தளத்தை இட்டு கொடுத்தார்கலேயாயின் நிச்சயமாக எதிர் அணியினருக்கு சவாலாகா இருக்கும். பாகிஸ்தானுடன் நடந்த அரை இறுதிப்போடியில் மலிங்க ரொம்பவும் சோர்வாகவும் ஒரு வித பயத்துடனும் காணப்பட்டார். அதைக் களைந்து விளயாடுவாராயின் எதிர் அணிக்கு அவரும் சவால் விடுவார் தனது பந்து வீச்சின் மூலம்.

Gayle எனும் போர் வீரன் போர்க்களம் எனும் மைதானத்தில் நின்றால் எதிரிக்கு மரண பயம்தான். அவருடன் Pollard டும் சேர்ந்தான் வான வேடிக்கைதான். ராம்போல் மற்றும் நாரைனே பந்து வீச்சில் கலக்குகிறார்கள்.






      
 
பார்ப்போம் நாளைக்கு தீவுகளா அல்லது தீவா கிண்ணத்தை "முதன் முறையாக" எனும் சொல்பதத்துடன் வெல்கிறது என்று!!



No comments:

Post a Comment