14 October 2012

மாற்றான்

சில படங்களை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றி பார்த்த படம்தான் இது. காரணம் அயன் கூட்டணி மீண்டும். ஆனால் வலைப்பதிவுகளிலும், த்விட்டேரிலும் கடுமையாக விமர்சிக்க பட்ட/படுகிற படம் என்பதால் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல் சென்றேன். அதனாலோ என்னவோ இந்த படம் எனக்கு பிடித்து கொண்டது. சரி இந்த படத்தின் கதை என்ன வென்று பார்த்தால்,

சூர்யாவின் அப்பா(சச்சின்) ஒரு விஞ்ஞானி, அவர் செய்யும் பரிசோதனை முயற்ச்சியில் ஒட்டி பிறக்கும் குழந்தைகள்தான் சூர்யா+சூர்யா. சச்சின், சிறு பிள்ளைகளுக்கான பால் பவுடர் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார் ஆனால் மற்ற கம்பனிகளை விட இவர் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்து விடுகிறார். அதை அழிக்க சில சக்திகள் முயலுகின்றன. யார் அதை அழிக்க முயலுவது, ஏன் அழிக்க முயலுவது, உண்மையான குற்றவாளி யார்  என்பதை சொல்கிறது படம்.

படம் பார்த்து கொஞ்ச நேரத்திலேயே யார் உண்மையான குற்றவாளி என்பதை அறிந்து கொள்கமுடிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை சில காட்ச்சிகளில் ஊகிக்க முடிகிறது. பாடல்களின் இசையை போலவும் பின்னணி இசையும் பெரிதாக எடுபட வில்லை. இரு பாடல்களை தவிர. "நாணி கோணி" பாடலின் லொக்கேஷன் சுப்பர். வழமை போல சூர்யா நடிப்பில் அசத்தி இருக்கிறார். (கஜால்)ஒருவரை காதலித்து, அவர் இறந்ததும் மற்றவரை காதலிப்பது என்பது ஆங்கில படங்களில் கூட வந்து இருக்குமோ தெரியா வில்லை. தமிழில் புரச்சி செய்கிறேன் என்று நினைப்பு போல. கஜாலின் கேரக்டர் முக்கியம் என்றாலும் அவருக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை! இடை வேளையின் பின் ரஷியன் மொழியில் கதைக்கும் போது அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பது என்பது இரண்டும் கேட்டான் நிலை.


இவ்வளவு ஓட்டை இருந்தும் பிடித்து இருக்கிறது என்றால், பார்க்கும் போது எந்த வித சோர்வையும் தராமல் இருப்பதே காரணம். இவர் எடுத்தது காவிய படமோ அல்ல விருத்துக்கோ அல்லவே!! ஒரு ஹை டெக் மசாலா படம். இங்கு ஓட்டையும் இருக்கும் எல்லாம் இருக்கும். சந்தோசமாக பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்!!!







இந்த படத்தில் டானியல்  பாலாஜி, "பச்சைக்கிளி முத்துச்சரம்" வில்லன் எல்லோரும் நடிப்பதாக இருந்தது ஆனால் இந்த படத்தில் இல்லை. "Stuck On You" படம் என்று சொன்ன படியால் கதையை அப்படியே மாற்றி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment