எனது வாசிப்பு காமிக்ஸ் புத்தகங்களுடன் மட்டுபடுத்த பட்டு இருந்தது சிறு வயது முதல். சில நேரங்களில் சில சிறு நாவல்களை வாசிக்கும் பழக்கம் உண்டு. காரணம் வாசிப்பதில் உள்ள சோம்பேறித்தனம்!! இருந்தாலும் நான் "பொன்னியின் செல்வன்" வாசிக்க தொடங்கியதன் காரணம், எல்லோரும் ஆகா ஓகோ என்று சொன்னதாலும், பல பேர் அதை திரையில் கொண்டுவர முயற்சி செய்ததும்தான் காரணம். அதனால் வாசிக்க தொடங்கினேன், தொடங்கியது முதல் அதை படித்து முடிக்கும் வரை வேறு நினைப்பு இல்லை. அது ஏன் என்று வசித்தவர்களுக்கு தெரியும், வாசிக்காதவர்கள் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.
இன்னமும் என் மனதில் வந்தியத்தவன்,அருள்மொழி வர்மா, ஆதித்த கரிகாலன், குந்தவி, நந்தினி, வானதி, வழுவேட்டயர்கள், ஆழ்வார்கடியான் என பல பேர் உள்ளனர். அந்தளவுக்கு எனை ஆட்கொண்டு விட்டது!
இந்த தொடர் "கல்கி"யில் மூன்று அரை ஆண்டுகள் வந்தது. அதை கிட்டதட்ட ஒருமாசத்தில் வாசித்து முடித்து விட்டேன். இதை முதலிலே முடித்து இருக்க முடியும். T20 உலகக்கிண்ண போட்டி காரணமாக முடியாமல் போய் விட்டது. இதை பல பேர் திரையில் கொண்டுவர முயற்சி செகிறார்கள், ஆனால் அதை அப்படியே கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வர வேண்டும் என்றால் "Harry Potter" போல ஒவ்வொரு பாகமா எடுக்க வேண்டும். அது தமிழில் முடியாத காரணம். முக்கிய சில விடயங்களை தொகுத்து ஒரு நல்ல திரைக்கதை மூலம் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கலாம். இதை திரையில் கொண்டு வர எதிர்ப்பதன் காரணம் உண்மைதமையை சிதைத்து விடுவார்கள் என்றுதான், ஆனாலும் இதை வாசிக்கும் நிலையில் பல பேர் இல்லை, வசதியும் இல்லை, ஆகவே திரையில் கொண்டுவந்தால் ஓரளவுக்கு ஏனும் இதை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நானும் திரையில் காண ஆவலுடன் உள்ளேன்!!