நான் தெலுங்கு படங்களையும் பார்ப்பேன் சில நேரங்களில். இந்த படத்தை நான்
பார்க்க 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஹாரிஸ் ஜெயராஜ் மற்றது ராம் சரண் தேஜா.
ஏன் என்றால் ஹரிஷின் இசை. கேட்க்கும் போதே நன்றாக இருந்தது (கேட்ட
பாடல்கள்(இசை)தான்), மற்றது ராம் சரண்; அவரின் மஹாதீர(மாவீரன்) பார்த்தேன்
அதனால் அவர் நடித்து வந்த அடுத்த படமான இதன் மேல் உள்ள எதிர்பார்ப்பு.
இந்த படம் 2010 ஆம் ஆண்டு வந்தது ஆனால் டவுன்லோட் செய்தது இந்த ஆண்டுதான்
அதுவும் பல மாதங்களின் பின் நேற்றுதான் பார்க்க கிடைத்தது!!
படத்தின் கதை என்று பார்த்தால், இவர் அவுஸ்திரலியாவில் அவரின் அக்காவுடன் வசித்து வருகிறார். படம் தொடங்கும் போதே "எங்கள் காதலை நாங்கள் முறித்து கொள்வோம், நீ ஒரு சைக்கோ" என்று கமராவை(ஹீரோயினை) பார்த்து சொல்கிறார். அது யார், ஏன் என்பதை பிளாஷ்பக் மூலம் சொல்கிறார். அவர் படிக்கும் போதே டீச்சருக்கே "லவ் யு" சொன்னவர். இப்படி வாழ்கையில் ஒன்பது பெண்களை லவ் பண்ணி கை கழுவி விடுகிறார்!! இப்போ அந்த லூசு(அதுதான் ஹீரோயின்-பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்) வருகிறது . ராம் சரணுக்கு அவர் மீது லவ் வருவதாக ஒரு சீன் அதுவும் முதல் சீன். என்ன கொடுமை; அரண்டுகொண்டு, விரண்டு கொண்டு. சொல்ல மறந்திட்டேன் ஹீரோயின் ஜெனிலியா; அப்போ சரிதான்!! பிறகு காலேஜ் போகும் போது அங்கு கோல்ப் விளையாட தெரியும் என்பதற்காக ஒருவனையும், சிங்க ஜோர்க் சொல்வான் என்பதற்காக ஒருவனையும், ஷாபி யாக இருக்கிறான் என்பதற்காக ஒருவனையும் இது லவ் பண்ணுது??? அந்த மூன்று பெரும் ஒரே நேரத்தில் dating போக கூப்பிடுகிறார்கள். அதனால் இது குலுக்கல் முறையில் ஒருவரை தெரிவு செய்ய முடிவு பண்ணது. அந்த நேரத்தில் நம்ம ஹீரோவும் வாறார், வந்து தானும் உன்னை லவ் பண்ணுகிறான் என்று சொல்லி அவர் பெயரையும் எழுதி போடுகிறார்.
பிறகு இவர் அவரின் பின்னால் சுத்துகிறார். ஒரு நிறத்தில் வில்லன்களிடம் இருந்த அவரை காப்பாற்றுகிறார் அதனால் இதுக்கு அவர் மேல் லவ் வந்திடுது. ஒரு கட்டத்தில் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை முழுவதும் காதலிக்க மாட்டேன் என்று. அதனால் ஜெனிலியாவும் குழம்புது நானும் குழம்பிட்டேன்!! அதனால் ஜெனிலியாவுக்கு வேறு திருமணம் பார் படுகிறது. அங்கே வந்து ஜெனிலியாவின் மண்டையை காய வைத்து அந்த கல்யாணத்தை நிறுத்துகிறார். ஆனாலும் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை பூராக காதலிக்க மாட்டேன் என்று. அது ஏன் என்றால், அவர் இந்தியாவில் இருக்கும் போது "ரூபா" என்ற பெண்ணை லவ் பண்ணுகிறார். அவரிடம் உண்மையாக இருக்கிறார் அதனால் அவர்களுக்கு இடையில் மனஸ்தாபம் வருகிறது அதனால் இவர் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் சந்தோசமாக இருக்கிறது இப்போ. ஆனால் இவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அதனால் அந்த காதலையும் முறித்து கொள்கிறார். அத்தோடு காதலிக்கும் போது எப்படி ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருகிறார்களோ(இருந்தால்) அதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் இருக்க மாட்டார்கள் என்கிறார். அதனால்தான், நான் யாரையும் வாழ்க்கை முழுவதும் லவ் பண்ண மாட்டேன் என்கிறார்.
ஆனால் சரண் , ஜெனிலியாவை லவ் பண்ணுகிறார். சரணின் முக்கியமான பொழுது போக்கு, சுவர்களில் படம் வரைவது. அது அவருக்கு பிடிக்க வில்லை. அதனால் அவர் சொல்கிறார் நீ அதை விட்டு விட்டு என்னை வாழ்க்கை முழுவது காதலிப்பதாக இருந்தால் வா என்கிறார். கடைசியில், தன் காதலு(லி)க்காக தன் கொள்கையை மாற்றினாரா அல்லது அதே கொள்கையுடன் இருந்து அவரை பிரிந்தார என்பதுதான் கிளைமாக்ஸ்!!
உண்மையில் இந்த படம் பெரிதாக ஓட வில்லை. காரணம், கதை சொன்ன விதம்,
ஜெனிலியாவின் கதாப்பாத்திரம்(எத்தனை படங்களில்தான் ஒரே மாதிரி ரசிப்பது),
எந்த வித விறு விறுப்பும் இல்லாமல் கதை நகர்கிறது. இருந்தாலும் சொல்ல வந்த
விடயம் நல்லது. அதாவது, இந்த காலத்தில் உண்மை காதலை யாரும் ஏற்பது இல்லை;
அதற்க்கு இருபாலரும் காரணம். எல்லோரும் பொய்யாகவே காதலிக்கிறார்கள் அதையே
இருபாலரும் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது படம்.
இந்த படத்தில் நான் ரசித்த விடயங்கள் என்றால், பாடல்கள்(கேட்டு பழகியவைதான்), ஒளிப்பதிவு, மற்றது வழமை போல பிரம்மானந்தம்!! வீட்டில் இருந்து பார்த்த படியால் போர் அடிக்காமல் பார்த்தேன் .
லவ் பண்ணுங்க ஆனால் உண்மையாக இல்லாமல் :))
படத்தின் கதை என்று பார்த்தால், இவர் அவுஸ்திரலியாவில் அவரின் அக்காவுடன் வசித்து வருகிறார். படம் தொடங்கும் போதே "எங்கள் காதலை நாங்கள் முறித்து கொள்வோம், நீ ஒரு சைக்கோ" என்று கமராவை(ஹீரோயினை) பார்த்து சொல்கிறார். அது யார், ஏன் என்பதை பிளாஷ்பக் மூலம் சொல்கிறார். அவர் படிக்கும் போதே டீச்சருக்கே "லவ் யு" சொன்னவர். இப்படி வாழ்கையில் ஒன்பது பெண்களை லவ் பண்ணி கை கழுவி விடுகிறார்!! இப்போ அந்த லூசு(அதுதான் ஹீரோயின்-பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்) வருகிறது . ராம் சரணுக்கு அவர் மீது லவ் வருவதாக ஒரு சீன் அதுவும் முதல் சீன். என்ன கொடுமை; அரண்டுகொண்டு, விரண்டு கொண்டு. சொல்ல மறந்திட்டேன் ஹீரோயின் ஜெனிலியா; அப்போ சரிதான்!! பிறகு காலேஜ் போகும் போது அங்கு கோல்ப் விளையாட தெரியும் என்பதற்காக ஒருவனையும், சிங்க ஜோர்க் சொல்வான் என்பதற்காக ஒருவனையும், ஷாபி யாக இருக்கிறான் என்பதற்காக ஒருவனையும் இது லவ் பண்ணுது??? அந்த மூன்று பெரும் ஒரே நேரத்தில் dating போக கூப்பிடுகிறார்கள். அதனால் இது குலுக்கல் முறையில் ஒருவரை தெரிவு செய்ய முடிவு பண்ணது. அந்த நேரத்தில் நம்ம ஹீரோவும் வாறார், வந்து தானும் உன்னை லவ் பண்ணுகிறான் என்று சொல்லி அவர் பெயரையும் எழுதி போடுகிறார்.
பிறகு இவர் அவரின் பின்னால் சுத்துகிறார். ஒரு நிறத்தில் வில்லன்களிடம் இருந்த அவரை காப்பாற்றுகிறார் அதனால் இதுக்கு அவர் மேல் லவ் வந்திடுது. ஒரு கட்டத்தில் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை முழுவதும் காதலிக்க மாட்டேன் என்று. அதனால் ஜெனிலியாவும் குழம்புது நானும் குழம்பிட்டேன்!! அதனால் ஜெனிலியாவுக்கு வேறு திருமணம் பார் படுகிறது. அங்கே வந்து ஜெனிலியாவின் மண்டையை காய வைத்து அந்த கல்யாணத்தை நிறுத்துகிறார். ஆனாலும் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை பூராக காதலிக்க மாட்டேன் என்று. அது ஏன் என்றால், அவர் இந்தியாவில் இருக்கும் போது "ரூபா" என்ற பெண்ணை லவ் பண்ணுகிறார். அவரிடம் உண்மையாக இருக்கிறார் அதனால் அவர்களுக்கு இடையில் மனஸ்தாபம் வருகிறது அதனால் இவர் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் சந்தோசமாக இருக்கிறது இப்போ. ஆனால் இவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அதனால் அந்த காதலையும் முறித்து கொள்கிறார். அத்தோடு காதலிக்கும் போது எப்படி ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருகிறார்களோ(இருந்தால்) அதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் இருக்க மாட்டார்கள் என்கிறார். அதனால்தான், நான் யாரையும் வாழ்க்கை முழுவதும் லவ் பண்ண மாட்டேன் என்கிறார்.
ஆனால் சரண் , ஜெனிலியாவை லவ் பண்ணுகிறார். சரணின் முக்கியமான பொழுது போக்கு, சுவர்களில் படம் வரைவது. அது அவருக்கு பிடிக்க வில்லை. அதனால் அவர் சொல்கிறார் நீ அதை விட்டு விட்டு என்னை வாழ்க்கை முழுவது காதலிப்பதாக இருந்தால் வா என்கிறார். கடைசியில், தன் காதலு(லி)க்காக தன் கொள்கையை மாற்றினாரா அல்லது அதே கொள்கையுடன் இருந்து அவரை பிரிந்தார என்பதுதான் கிளைமாக்ஸ்!!
இந்த படத்தில் நான் ரசித்த விடயங்கள் என்றால், பாடல்கள்(கேட்டு பழகியவைதான்), ஒளிப்பதிவு, மற்றது வழமை போல பிரம்மானந்தம்!! வீட்டில் இருந்து பார்த்த படியால் போர் அடிக்காமல் பார்த்தேன் .
லவ் பண்ணுங்க ஆனால் உண்மையாக இல்லாமல் :))

/// இந்த காலத்தில் உண்மை காதலை யாரும் ஏற்பது இல்லை; அதற்க்கு இருபாலரும் காரணம். எல்லோரும் பொய்யாகவே காதலிக்கிறார்கள் அதையே இருபாலரும் விரும்புகிறார்கள் ///
ReplyDeleteஉண்மையத்தான் சொல்லியிருக்காங்கப்பா...