தமிழ் சினிமாவில் ஒரு படம் வரும் பொழுது அது இந்த படத்தின் தழுவலாக
இருக்குமோ, அந்த படத்தின் தழுவலாக இருக்குமோ என்று எல்லாம்
இணையத்தளத்திலும் பத்திரிகைகளிலும் அலசி ஆராய்வார்கள். இந்த முறை கைகளில்
சிக்கி இருப்பது "மாற்றான்". அது எந்த படத்தின் தழுவலாக இருக்கும் என்பதை
படம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் K .V.ஆனந்த் சொல்வது
போல் தழுவல் அல்லாமலும் இருக்கலாம். இங்கே ஆராய பட இருப்பது இரண்டு படங்களை
பற்றி; Stuck on you(2003) & Alone(2007)
Stuck on you படத்தின் கதை என்ன ?
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் "பாப்" Normal Type. "வால்ட்" Causual Tpye. இருவரும் ரெஸ்டாரண்ட் நடத்திவருகிறார்கள். கஸ்டமர் ஆர்டரை ரெண்டே நிமிஷத்தில் ரெண்டு பேரும் செய்துதரும் ஸ்டைலுக்காகவே இந்தக் கடையில் சாப்பிட கூட்டம் கூடும்.
தன்னுடன் ஒட்டிப்பிறந்த வால்ட் இருப்பதை சொல்லாமலே ’மேபாங்’ என்ற பெண்ணுடன் Letter மூலம் காதலாகிறான் பாப். வால்ட்டுக்கு ஹாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை. இதற்கு வேண்டா வெறுப்பாக பாப் சம்மதிக்க கலிபோர்னியாவில் குடியேறுகிறார்கள். ஹாலிவுட் வாய்ப்பு தேடுகிறான் வால்ட். புளூஃபிலிமில் நடிக்கிறாயா? என ஏராள வாய்ப்புகள் வர அதை ஏற்காமல் முயற்சிக்கிறான். பாப் மண்டைக்காய்வதை பார்த்த வால்ட் பாப்பிற்கு தெரியாமலேயே அவனுடைய காதலியை சர்ப்ரைஸாக வரவைக்கிறான் வால்ட்.
ஒருநாள் பாப்பும் வால்ட்டும் ஒன்றாக படுக்கையில் இருக்க... ‘நீ ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழி’ என சண்டை போட்டுவிட்டு ’ஒட்டிப்பிறந்தவர்கள்’ என்கிற விளக்கத்தை ஏற்காமல் போய்விடுகிறாள்!
டிவி தொடரில் வால்ட் புகழ்பெறுவதுடன் அவர்கள் "Conjoined Twins" என்கிற செய்தி மீடியாவில் வர உண்மையறிந்த காதலி திரும்பி வந்து ‘நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்’ என்கிறாள். பிரச்சனை வேண்டாம் இருவரும் ஆபரேஷன் மூலம் தனியாகிவிடுவோம் என பாப்பின் எதிர்ப்பை மீறி வால்ட் முடிவுசெய்கிறான்.
ஆபரேஷன் சக்சஸ். வால்ட் ஹாலிவுட்டில் வாய்ப்புதேட, பாப் ஊர் திரும்பி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறான்.ஆனால் ஒட்டியிருந்த போது வால்ட்டுக்கு இருந்த நடிப்புத்திறமை இப்போது இல்லை. பாப்பிற்கும் ஓட்டல் வேலையில் சுறுசுறுப்பு இல்லை.
வால்ட் ஊர்திரும்பி பாப்புடன் ஓட்டலில் பணி செய்கிறான். ஆனால் இரட்டையராக அவர்கள் இருந்தது தான் கஸ்டமர்களை கவர்ந்த விஷயம். அதனால் கூட்டம் குறைய விசேஷ உடை ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு ஒட்டிய பிறவிகளாகவே மாறிவிட வாழ்க்கையும் வியாபாரமும் களைகட்டுகிறது.
நகைச்சுவை உணர்ச்சியோடு எடுக்கப்பட்ட இந்த படத்தைத்தான் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஆக்ஷன் ஃபார்முலாவுக்கு ஏற்ப ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என்று பேசிக்கிறாங்க. அதில் இரு நடிகர்கள் சோல்டர் ஒட்டியது போல நடித்தார்கள். இதில் சூர்யா ஒருவரே நடித்திருப்பது வியப்பு!
ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளில் ‘பிம்’ சாந்தமானவள். ‘பிலாய்’ முசுடு. ‘வீ’ எனும் இளைஞனை இந்த சகோதரிகள் சந்திக்கையில் ‘பிம்’ மை அவன் விரும்புகிறான். ‘பிம்’முக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் நானும் அவனை லவ் பண்றேன் என பிலாய் பிரச்சனை பண்ண....
ஒரு கட்டத்தில் இருவரும் ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரிய முடிவுசெய்கிறார்கள்.
ஆபரேஷன் மூலம் பிரிக்கிற போது ‘பிலாய்’ இறாந்துவிடுகிறாள். ’பிம்’மும், ’வீ’ யும் தாய்லாந்தை விட்டு வெளியேறி தென்கொரியாவில் வசிக்கிறார்கள். ‘உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என ஒருநாள் பிம்முக்கு போன்வர... ’வீ’யுடன் கிளம்பி வருகிறாள். அம்மாவின் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்று தன் வீட்டில் பிம் தங்க இறந்து போன பிலாயின் ஆவி பிம்மை துவம்சம் செய்கிறது!
"மாற்றான்" படம் "அலோன்" படத்தின் கதை தானே? என மீடியாக்கள் டைரக்டர் கே.வி.ஆனந்தை கேள்வியால் துளைக்க!! மிகத்தெளிவாகவும், அழுத்தமாகவும் தன் பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்.
இது "அலோன்" படத்தின் கதை இல்லை. அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிய பிறகு தான் "அலோன்" படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு. புத்தகம் ஒன்றில் தாய்லாந்து நாட்டில் பிறந்த கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் பற்றி படித்ததன் பாதிப்பு தான் "மாற்றான்" என விளக்கமாகச் சொன்னார் கே.வி.ஆனந்த்
இதே நேரத்தில் பிரியாமணியும் "சாருலதா" என்கிற படத்தில் நடிக்கிறார். அது "Alone" படத்தின் தழுவல் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இருந்தாலும் இந்தியாவில் வரும் (சாருலதா முதலில் வரா விட்டல்) Conjoined Twins படம் என்கிற பெருமையை பெரும்; அதே நேரத்தில் சூர்யாவின் கடின உழைப்பும் ஆனந்தின் கடின உழைப்பும் நிச்சயாமாக ரசிக்கபடும் என்று நம்புகிறோம். "கோ" படமும் ஒரு தழுவல் படம். என்றாலும் அது சுப்பர் ஹிட் ஆனது. எனக்கு என்னவோ படத்தின் கதை "Alone" படத்தின் தழுவலாகவும் சில காட்ச்சிகள் "Stuck on you" படத்தின் நகலாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம் மாற்றான் "அசலா" "நகலா" என்று!!
இதே நேரத்தில் பிரியாமணியும் "சாருலதா" என்கிற படத்தில் நடிக்கிறார். அது "Alone" படத்தின் தழுவல் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இருந்தாலும் இந்தியாவில் வரும் (சாருலதா முதலில் வரா விட்டல்) Conjoined Twins படம் என்கிற பெருமையை பெரும்; அதே நேரத்தில் சூர்யாவின் கடின உழைப்பும் ஆனந்தின் கடின உழைப்பும் நிச்சயாமாக ரசிக்கபடும் என்று நம்புகிறோம். "கோ" படமும் ஒரு தழுவல் படம். என்றாலும் அது சுப்பர் ஹிட் ஆனது. எனக்கு என்னவோ படத்தின் கதை "Alone" படத்தின் தழுவலாகவும் சில காட்ச்சிகள் "Stuck on you" படத்தின் நகலாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம் மாற்றான் "அசலா" "நகலா" என்று!!















