நான், எல்லோரை போலவும் ஒரு இசை பிரியன். எனக்கு பிடித்தது ராஜாவும், அவர் வாரிசும் என்றாலும் நல்ல இசையை ரசிப்பேன். கிட்டத்தட்ட இன்னொரு வாரிசு போல இருந்த ரகுமானின் இசையில் வந்து இருக்கும் "கடல்" எப்படி இருக்கிறது???
மணிரத்னம்+ரகுமான் என்றால், படம் எப்படியோ ஆனால் பாடல்கள் ஹிட் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் சில வாரங்களுக்கு முதல் "நெஞ்சுக்குள்ளே" எனும் ஒரு பாடலை மாத்திரம் வெளியிட்டு இருந்தார்கள். வந்த மாத்திரத்தில் எல்லோருக்கும் பிடித்து விட்டது, அதன் இசையும், வரிகளும், பாடியவரின் குரலும். வழமையாக ரகுமானின் பாடல்களை கேட்க, கேட்கத்தான் பிடிக்கும். இது வந்த உடனே பிடித்து விட்டது. சரி, ஒரு பாட்டே இப்படி என்றால் எல்லா பாடல்களும் நல்லாக இருக்கும் என எதிர் பார்த்து இருந்தேன். இன்னொரு காரணம், இந்த கூட்டணி தந்த எதிர்பார்ப்பு.
நேற்றுதான் எல்லா பாடல்களையும் கேட்டேன். கேட்ட பின் எனக்கு தோன்றியது, இவருக்கு என்ன ஆகிவிட்டது இந்த முறை? இப்படி சொதப்பி விட்டரே என்று!! வழமையாக, படத்தில் உள்ள (ஒரே) ஒரு நல்ல பாடலை மாத்திரம் வெளியிடுவார்கள். நல்லா இருக்கும் போல என நினைத்து எல்லா பாடலையும் கேட்டால், மற்றது எல்லாம் கடுப்பேத்தும் எங்களை. அப்படித்தான் இருந்தது எனக்கும் இந்த "கடல்" பாடல்களும். அதனால் FB & Twitter என சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தி இருந்தேன்.
இன்று காலையில், மீண்டும் Winamp ஐ ஒன் செய்து விட்டு Play Button ஐ அழுத்தினேன். "துப்பாக்கி" பாடலில் இருந்து ஆரம்பித்தது (இன்னமும் துப்பாக்கி பிடித்து இருக்கிறது) சில நிமிடங்களின் பின், "மூங்கில் தோட்டம்" என மெல்லிய வருடும் இசையில் ஒரு பாட்டு வந்தது. அப்படியே செய்து கொண்டு இருந்த வேலையே விட்டு விட்டு அதில் லயித்தேன். என்ன படம் என பார்த்தேன், "கடல்". பிறகு, மீண்டும் எல்லா பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டேன் அமைதியாக.... ஒன்று, இரண்டானது, இரண்டு மூன்றாகி விட்டது இப்போ!! (01) நெஞ்சுக்குள்ளே (02) மூங்கில் தோட்டம் (03) மகுடி மகுடி என பிடித்து விட்டது. ரகுமான் ரசிகர்கள் எப்போதும் சொல்லுவது, கேட்க கேட்கதான் பிடிக்கும் என. உண்மைதான்!!!!

No comments:
Post a Comment