24 December 2012

கிரிக்கெட்டின் கடவுள்

வாழ்வில் எமக்கு சில, பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சிலவே எம்மை ஒன்றாக இணைக்கிறது. அதில் ஆசிய நாட்டவர்களுக்கு கிரிக்கெட் முக்கியமானது. (சினிமாதான் உண்மையில் பல கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக உள்ளது). அதிலும் ஒரு சிலர் இன, மதத்தை கடந்து அல்ல நாட்டையும் கடந்து கவருவார்கள். அதில் முக்கியமானவர் யார் என்று கேட்டால் அநோகரின் ஒருமித்த குரல் "சச்சின்". அந்த சச்சின் தனது 23 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் (சர்வதேச ஒருநாள் போட்டிகள்) இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்.



நான் எப்போ கிரிக்கெட் பார்க்க தொடங்கினேனோ அன்றில் இருந்து இன்று வரை பிடித்த வீரர்; அதவாது, அதை விரும்ப காரணமாக இருந்தவர்.கிரிக்கெட்டின் கடவுள் என்றால் எல்லோரும் சொல்லும் பதில் சச்சின், அவரை பிடிக்காதவர்களுக்கு கூட அவரின் பெயரே முதலில் நினைவு வரும்; வீம்புக்கு வாயில் இருந்து வேறு பதில் வரும். "கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் கடவுள் சச்சின்" இது வெறுமனே வரும் வார்த்தை இல்லை. கிரிக்கெட் மேல் அவர் கொண்ட பற்றுக்கு கிடைத்த மரியாதை.




இதுவரை சத்தத்தில் சதம், முதன் முதலில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்/ஓட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம் சாதனைகளை. தன் வாழ்வின் லட்ச்சியமாக உலக கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார், அதை சச்சினின் உதவியுடன் தோணி நனவாக்கினார். சச்சினின் ரசிகனாக தோணிக்கும் நன்றி இந்த நேரத்தில்.




சில நேரங்களில் சற்று வீழ்ச்சிபாதையிலும் சென்று இருக்கிறார். ஆனால், மற்றவர்கள் வீழ்ந்ததை போல் அல்ல. அந்த நேரத்தில் கூட கடவுளாகவே இருந்தார் கிரிக்கெட் ரசிகர்களுக்கு. தன் 16 வயதில் இருந்து இன்று வரை எமக்காக விளையாடி கொண்டு இருக்கிறார். இனி அவரின் அதிரடியை இணையத்தில்தான் பார்க்கலாம். அதிரடி இல்லாட்டி என்ன, டெஸ்ட் போட்டிகளில் அவரின் துடுப்பாட்டத்தை ரசிக்கலாம். சில வேளைகளில் டெஸ்ட் போட்டியை பார்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும், கிரிக்கெட் கடவுளுக்காக. மீண்டும் ஒருமுறை, "கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் கடவுள் சச்சின்". 



 தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடித்த 200* ஓட்டங்கள்.


16 December 2012

கேட்க கேட்க பிடிக்கும் - கடல்

நான், எல்லோரை போலவும் ஒரு இசை பிரியன். எனக்கு பிடித்தது ராஜாவும், அவர் வாரிசும் என்றாலும் நல்ல இசையை ரசிப்பேன். கிட்டத்தட்ட இன்னொரு வாரிசு போல இருந்த ரகுமானின் இசையில் வந்து இருக்கும் "கடல்" எப்படி இருக்கிறது???



மணிரத்னம்+ரகுமான் என்றால், படம் எப்படியோ ஆனால் பாடல்கள் ஹிட் ஆகும்  என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் சில வாரங்களுக்கு முதல் "நெஞ்சுக்குள்ளே" எனும் ஒரு பாடலை மாத்திரம் வெளியிட்டு இருந்தார்கள். வந்த மாத்திரத்தில் எல்லோருக்கும் பிடித்து விட்டது, அதன் இசையும், வரிகளும், பாடியவரின் குரலும். வழமையாக ரகுமானின் பாடல்களை கேட்க, கேட்கத்தான் பிடிக்கும். இது வந்த உடனே பிடித்து விட்டது. சரி, ஒரு பாட்டே இப்படி என்றால் எல்லா பாடல்களும் நல்லாக இருக்கும் என எதிர் பார்த்து இருந்தேன். இன்னொரு காரணம், இந்த கூட்டணி தந்த எதிர்பார்ப்பு.





நேற்றுதான் எல்லா பாடல்களையும் கேட்டேன். கேட்ட பின் எனக்கு தோன்றியது, இவருக்கு என்ன ஆகிவிட்டது இந்த முறை? இப்படி சொதப்பி விட்டரே என்று!! வழமையாக, படத்தில் உள்ள (ஒரே) ஒரு நல்ல பாடலை மாத்திரம் வெளியிடுவார்கள். நல்லா இருக்கும் போல என நினைத்து எல்லா பாடலையும் கேட்டால், மற்றது எல்லாம் கடுப்பேத்தும் எங்களை. அப்படித்தான் இருந்தது எனக்கும் இந்த "கடல்" பாடல்களும். அதனால் FB & Twitter என சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தி இருந்தேன்.



இன்று காலையில், மீண்டும் Winamp ஐ ஒன் செய்து விட்டு Play Button ஐ அழுத்தினேன். "துப்பாக்கி" பாடலில் இருந்து ஆரம்பித்தது (இன்னமும் துப்பாக்கி பிடித்து இருக்கிறது) சில நிமிடங்களின் பின், "மூங்கில் தோட்டம்" என மெல்லிய வருடும் இசையில் ஒரு பாட்டு வந்தது. அப்படியே செய்து கொண்டு இருந்த வேலையே விட்டு விட்டு அதில் லயித்தேன். என்ன படம் என பார்த்தேன், "கடல்". பிறகு, மீண்டும் எல்லா பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டேன் அமைதியாக.... ஒன்று, இரண்டானது, இரண்டு மூன்றாகி விட்டது இப்போ!! (01) நெஞ்சுக்குள்ளே (02) மூங்கில் தோட்டம் (03) மகுடி மகுடி என பிடித்து விட்டது.  ரகுமான் ரசிகர்கள் எப்போதும் சொல்லுவது, கேட்க கேட்கதான் பிடிக்கும் என.  உண்மைதான்!!!!





08 December 2012

9/11 உள் வீட்டு சதியா??

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் இப்போ மறுபடியும் பேசப்படுகிறது. எல்லோருக்கும் 9/11 என்று சொன்னால் உடனே புரியும். ஏன் மறுபடியும் பேசப்படுகிறது?? என்பதை எனக்கு தெரிந்த/அறிந்த சில விடயங்களை வைத்து சொல்கிறேன்.


அவர்கள் சொல்லும் காரணம் "9/11 Was an Inside Job" தெரிந்த பாஷையில் சொல்வது என்றால் "அது ஒரு உள் வீட்டு சதி". யார் செய்தது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். செய்தது அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி "ஜோர்ச் புஷ்". என்ன ஆச்சர்யமா இருக்கா? உண்மை அதுதான் என கிட்டத்தட்ட நிருபிக்க பட்டு இருக்கிறது. என்ன உண்மை??


முதலிலே, ஒரு கட்டிடத்தை ஒரு விமானத்தால் நடுப்பகுதியில் இடிக்கும் போது எப்படி கட்டிடம் முழுவதும் இடிந்த தரை மட்டம் ஆகும் (Building 7). அமெரிக்காவின் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் கேட்கும் கேள்வி இது. எப்படி முடிந்தது என்பதற்கும் அவர்கள் சொல்லும் காரணம், அந்த கட்டிடம் முழுவதும் வெடி மருந்துகளை வைத்து வெடிக்க வைப்பதன் மூலம் முடியும் என சொல்கிறார்கள். 




மற்றது, விமானம் கட்டிடத்தில் மோத முதலே அதில் இருந்து வெடி வெடித்து கட்டிடத்தை தாக்கியது. அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போ வீடியோ ஆதாரம் கிடைத்து இருக்கிறது. ஆமா, என்ன வெடித்து?? விமானத்தில் பொறுத்த பட்டு இருந்த "ஏவுகனை"  மூலம் கட்டிடத்தை வெடிக்க வைத்த அடுத்த சில நொடிகளில் விமானம் மூலம் தகர்க்கபட்டது.


அப்போ விமானத்தில் இருந்த பயணிகள்?? அப்படி யாரும் போனால்தானே இறப்பதற்கு!! அது மட்டும் அல்ல, அமெரிக்கா இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு செய்த காரியாம்தான் இது. அதற்க்கு பிராயச்சித்தமாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவரும் உயிர் இழக்க வில்லை!! உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3,000 மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அன்று எல்லோரும் வர வில்லை, இறக்கவும் இல்லை!! அது எப்படி சாத்தியம் ஆகிற்று??

இதற்க்கு பயன் படுத்த பட்ட விமானங்கள் பயணிகள் விமானம் இல்லை அது இராணுவத்தில் பயன் படுத்த படும் விமானம். அதற்க்கு சொல்ல பட்ட காரணம், அதில் எந்த விதமானமான ஜன்னல்களும் இருக்க வில்லை, அந்த விமானங்களை விமான நிலையங்களில் கண்டது கூட இல்லை, அது மட்டும் அல்ல விமானத்தின் முன் பகுதியில் நீல நிற இலச்சினை பொறிக்க பட்டு இருந்தது என FOX நிருபர் சொல்லி இருக்கிறார்.

பென்டகன் மீதோ வெள்ளை மாளிகை மீதோ தாக்க கொண்டு வந்த விமானம் இடை நடுவிலே விழுந்து நொறுங்கி விட்டது. பென்டகன் மீது விமானம் விழுந்தது. ஆனால் ஒரு பகுதியில் மாத்திரம். அங்கே ஏதாவது இருந்தால்தானே இருக்கும் கோப்புக்கள் அழிய. மற்றது, அந்தளவு பாதுகாப்பு வலயங்கள் எல்லாத்தையும் மீறி எப்படி வந்து தாக்கியது? எத்தனை ராடர்கள், எத்தனை விமான எதிர்ப்பு பீரங்கிகள். எப்படி மண்ணை தூவ முடிந்தது அவர்களால்??

உலகின் போலீஸ்காரனான அவன் வீட்டுக்குள்ளே புகுந்து அவுனுக்கே தெரியாமல் எப்படி விமானத்தை கடத்தி இதை செய்ய முடிந்தது இவர்கள் கூறும் இந்த "அல்கொய்தா" வினரால்?? அமெரிக்க, இஸ்ரேல் மட்டும் அல்ல CIA யின் உதவியுடன்தான் இதை செய்துஇருக்கிறார் புஷ் அவர்கள். நான் சொல்வதை விட சில வீடியோ இணைப்புக்களை தருகிறேன் அதன் மூலம் உண்மையை நீங்கள் அறியலாம். ஆமா, ஏன் இதை அவர்கள் செய்ய வேண்டும்?? அதற்கும் இன, மத ரீதியான பல காரணங்கள் உண்டு. அதை நான் இங்கே சொல்ல வந்தால் வீண் பிரச்சினைகள் வரும். நீங்களே அறிந்து கொண்டால் புத்திசாலி!!