29 November 2012

ஒலகம் அழிய போதா???

இப்போ எல்லோர் மனதிலும் இருக்கும் விடயம் 21.12.2012 மாயன் என்ற மக்கள் சொன்ன மாதிரி உலகம் அழிந்து விடுமா என்பதே?? பல பேரும் பலவிதமா ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்/செய்கிறார்கள். இந்த மாயன் என்பவர்கள் யார்/வரலாறு என்ன என்ற இதிகாசங்கள் இப்போ உங்களுக்கு சொல்ல வர வில்லை. அழியுமா, இல்லையா என்பதை பற்றி நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள்; அதனால் நானும் கிறுக்கவும், பிதற்றவும் வந்து இருக்கிறன்.




மேலே உள்ள படம்தான் மாயன்களின் நாட்காட்டி. இதுதான் முடிவடிகிறது 21.12.2012 அன்று.


பல பெரும் பல விதமாக சொல்கிறார்கள், அதில் ஒன்று "நிபுரு" எனும் கோள் பூமியை வந்து தாக்கும் என்று!! அது என்ன "நிபுரு"?? 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடு பட்டு கொண்டு இருக்கும் போது இதை கண்டதாக சொல்கிறார்கள் (நாசா இதை மறுத்து இருந்தது). அதாவது இது வந்து பூமியை தாக்கும் எனவும் அதனால் அழிவு உண்டாகும் எனவும் சொல்கிறார்கள். இது பூமியில் விழும் போது சுனாமி, நிலநடுக்கம் போன்றன ஏற்பட்டு பாரிய அழிவுகள் உண்டாகும் என கூற படிக்கிறது.
 
மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள்!! சூரியனுக்கு அருகில் ஒரு புள்ளி தெரிகிறது அதுதான் "நிபுரு" என சொல்கிறார்கள். உண்மையை நான் அறியேன். (உங்கள் போனிலோ அல்லது காமராவிலோ நீங்களும் எடுக்கலாம்)

 மற்றையது, பூமியும், சூரியனும் ஒரே கோட்டில் 21.12.2012 சந்திக்கின்றது என்றும், இதன் போது, துருவங்கள் மாற்றம் அடையும் எனவும் பூமி தன்னை மீளமைக்கும் எனவும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, வட, தென் துருவங்கள் மாறும். இன்னமும் சொல்ல போனால் சூரியன் மேற்கே உதிக்கும்!! இந்த மாற்றத்தினால் துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி நீர் மட்டம் அதிகரித்து நிலப்பரப்பை நீர் உள்வாங்கி கொள்ளும் எனவும் கூற படுகிறது.



மற்றையது, உலகில் பல எரிமலைகள் பூமிக்கடியில் இருக்கின்றன.குறிப்பாக 7. அதில் ஒன்று அமெர்க்காவில் உள்ள "Yellowstone" எனப்படும் எரிமலை. இந்த எரிமலை வெடிக்கும் எனவும், அதில் இருந்து வெளியேறுவன அந்த இடத்தையே நாசம் செய்து மற்றய எரிமலைகளையும் வெடிக்க வைக்கும் எனவும், இதனால் எல்லா இடமுமே அழிந்து போய் விடும் எனவும் கூற படுகிறது.




இன்னமும் பலகாரணங்கள் கூற படுகிறது. சில வற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். மேலே கூறப்பட்டவை எல்லாம் விஞ்ஞான ரீதியில் கூற பட்டவை. இனி மத ரீதியாக நான் அறிந்த அல்லது எனக்கு கூற பட்டவற்றைசொல்லுகிறேன்.

உலகில்உள்ள எல்லா மதமும் சொல்கிறது என்றோ ஒருநாள் உலகம் அழியும் என்று. ஆனால் எந்த மதமும் இந்த நாள்தான் என்று அறுதியிட்டு சொல்ல வில்லை. ஆனால் எந்த சந்தர்ப்பத்தில் அல்லது கால கட்டத்தில் ஏற்படும் என்று கூற பட்டு இருக்கிறது.

இந்து மதம் சொல்கிறது, கலியுகம் முடியும் போது உலகம் அழியும் என்று. இப்போ நடந்து கொண்டு இருப்பது கலியுகம். இந்த யுகம் முடிந்த உடன் நிச்சயம் அது நடக்கும் என்று சொகிறது. இஸ்லாம் சொல்கிறது, அழிவின் அடையாளமாக, சூரியன் மேற்கில் உதிக்கும் எனவும் அதன் பின் அழியும் எனவும் சொல்கிறது. அன்றைய நாள் வெள்ளிக்கிழமை எனவும் சொல்கிறது    ( 21.12.2012 கூட வெள்ளிகிழமைதான்). இதே போல, கிறிஸ்தவ மதமும், யூத மதமும் வேறு மதங்களும் சொல்கின்றன உலக அழிவை பற்றி.






எனது பார்வையில் :- சுனாமி வருது, நில நடுக்கம் வருது என்று சொன்ன மாதிரி இதுவும் வருது, வந்து போகும்.... அவ்வளவே. ஆனால், சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. "மொட்டை" ரசினி சொன்ன மாதிரி, "சாகிற நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகம் ஆகிடும்" என்ற மாதிரி வாழப்போகும் நாளை நரகம் ஆக்காதீர்கள்!!!  எலே Be Happy :))

25 November 2012

ஜன்னல் ஓரம்

ஒரு அவசர வேலை காரணமாக கண்டி போக வேண்டி இருந்தது. அதனால் அறக்க பறக்க வெளிக்கிட்டு கண்டி போகும் பஸ்சில் ஜன்னல் ஓரம் இருந்தேன். இன்று ஞாயிற்று கிழமை என்ற படியால் பஸ் ஸ்டாண்டில் பெரிதாக சன நடமாட்டம் இல்லை.




பஸ்சுக்குள் அதிகாலை என்ற படியால் இருக்கைக்கு அளவாக பயணிகள் இருந்தார்கள். ஒரு சில இருக்கைகளை தவிர. தண்ணி விப்பவர்க்ளும், வடை போன்ற சிற்றுண்டி விப்பவர்களும் அடிக்கடி வந்து சென்றார்கள். பஸ் புறப்பட சில நொடிகள் இருக்கும் போது பாவாடை, தாவணியில் ஒரு பெண் குலுங்க குலுங்க ஓடி வந்தாள். அந்த அதிகாலை வேளை மெல்லிய சூரிய வெளிச்சத்தில் தேவதை போல தெரிந்தாள் எனக்கு. ஓடி வருவது நான் போகும் பஸ் ஐ நோக்கி. என் மனம் பதை பதைத்தது என் பக்கத்தில் இருப்பாளோ அல்லது வேறு இருக்கையில் அமர்வாளோ என்று. என்னை அதிகம் ஜோசிக்க விடாமல் என் இருக்கை இருக்கும் பக்கம் வந்தாள், இருந்தாள். என்னை ஆசுவாச படுத்தி கொண்டு சிறிது நேரம் இருந்தேன்.

பஸ் புறப்பட தொடங்கியது. ந ந ந ந நா நா ந ந ந என்று என் தொலைபேசி தொல்லை செய்தது. நான் சயிலன்ட் இல் போட்டு விட்டு, என்னை தன் அழகால் கிறங்க வைத்தவளிடம் எப்படி பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தான். மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.

சிறிது நேர அமைதியின் பின், எங்கே போறிங்க என்று கேட்டேன். அவளும் கண்டி என்றாள். என்ன விடயமாக போகிறிங்க என்று அடுத்த கேள்வியை கேட்டேன். பேராதெனிய கம்பசில் படிக்கிறாளாம் என்று பதில் சொன்னாள். அவளும் இன்னை பற்றி கேட்டு கொண்டாள். இப்படியே பரஸ்பரம் கதைத்து கொண்டு சென்றோம். என்ன பெயர் என்று பல நிமிடங்களுக்கு பிறகுதான் கேட்டேன். ரூபிகா என்றாள்! மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.

இப்படியே கதைத்து கொண்டு இருக்கும் பொழுது உங்க போன் நம்மரை தர முடியுமா என்றேன் ஒரு வித பதை பதைப்புடன். ஜோசித்து விட்டு சரி என்று தன் நம்பரை சொன்னாள்.நான் எனது போனை எடுத்து சேவ்  பண்ண போனேன். அவள் சொன்னாள், 077-57 ந ந ந ந நா நா ந ந ந மீண்டும் அடித்தது என் போன். வாயில் வந்த கேட்ட வார்த்தைகளை அடக்கி கொண்டு போனை என் காதில் வைத்தேன்.

டேய் மூதேவி எங்கடா இருக்கிறாய்??? படம் தொடங்க இன்னமும் 10 நிமிஷம்தான் இருக்கு என்றான் என் நண்பன். சுற்றும் முற்றும் பார்த்தேன் பஸ்சுக்கு பதில் வீடு, இருக்கைக்கு பதில் கட்டில், அவளுக்கு பதில் வீட்டு சுவர். இதோ வாறண்டா என சொல்லி போனை கட் பண்ணி விட்டு, அறக்க பறக்க பாத் ரூம் நோக்கி ஓடினேன்!!!

14 November 2012

துப்பாக்கி

இந்த வருடம் வந்த "சகுனி", "பில்லா", "தாண்டவம்", "மாற்றான்" என எல்லா பெரிய ஹீரோகளுடைய படமும் ஊத்திக்கொண்டு விட்டது (விஜய்+ஷங்கரின் நண்பன் தவிர). இந்த நேரத்தில் பெரிய எதிர் பார்ப்புடன் வந்த படம்தான் "துப்பாக்கி". எதிர் பார்ப்பு என்ன வாகிற்று.....

கதை என்று பார்த்தால் ரொம்ப பழசுதான். தீவிரவாத கும்பலை அடியோடு அழிக்கும் ஹீரோ. அதாவது, விஜய் ஆமியில் இருப்பவர். லீவு காரணமாக சொந்த ஊரான மும்பைக்கு வாறார் அங்கே ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமான ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து கொண்டு எப்படி மற்ற எல்லோரையும் பிடிக்கிறார் என்பதே கதை. ஆனால், அதை சொன்ன விதம் பர பர.. விறு விறு...!!

முருகதாசின் முந்தய படமானா "7ஆம் அறிவு" பெரிதாக பேச படதா காரணத்தினால் இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திரைக்கதையில் மினக்கட்டு இருக்கிறார். அதற்க்கு பலனும் பெற்று இருக்கிறார். விஜய் "சுறா" எனும் தோல்வி படத்துக்கு பிறகு தனது படங்களை கவனமாக தெரிவு செய்து வருகிறார். காவலனில் இருந்து தெரிகிறது. இதையே தொடர்ந்தால் ஏறுமுகம்தான்.

காஜல் அகர்வால், விஜயுடன் லவ்வுகிறார், ஆடுகிறார், பாடுகிறார் அவ்வளவுதான். சந்தானம், ஜெயராம் எல்லோரும் கொடுத்ததை செய்து இருக்கிறார்கள். ஆனால் நண்பனில் இருந்த வாய்ப்பு இங்கே இல்லை சத்தியனுக்கு. அடுத்து வில்லன், பில்லாவில் வீணடிக்க பட்டவர் இதில் பயன்படுத்த பட்டு இருக்கிறார். இனி இவரை இங்கே பார்க்க முடியும் அதிக படங்களில்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது (அரைச்ச மாவு என்றாலும்). அதை எப்படி காட்சி படுத்தி இருப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு இருந்தது அதை இந்தியாவின் முதல் நிலை ஒளிப்பதிவாளரானா சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுடனும் நடன இயக்குனர்களின் நடன உதவியுடனும் முருகதாஸ் எங்களை ஆட்டம் போட வைக்கிறார். படத்துக்கு படம் விஜய் வயது குறைந்தவராக தெரிகிறார். எப்படிங்ண்ணா???



இடைவேளைக்கு முந்திய அந்த ஆக்க்ஷன் காட்சி மற்றும் நாயின் உதவியுடன் கடத்தியவர்களை கண்டு பிடிக்கும் காட்சி செம. Google Google பாடல் தொடங்கியவுடன் அரங்கமே அதிர தொடங்கியது பலர் எழுந்த ஆடவும் செய்தார்கள். அந்த இறுதி சண்டை காட்சி கில்லியை ஞாபகபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறார் விஜய் தன் ஸ்டைல் மூலம். அழகாக ஹிந்தியும் பேசுகிறார். ( ஹிந்தி தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும் சரியா பிழையா என்று)

என்னை கேட்டால் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு மாஸ்+கிளாஸ் படம் வந்து இருக்கிறது, வென்று இருக்கிறது. கில்லி, போக்கிரி, துப்பாக்கி எது சிறந்தது என்று கேட்டால், கில்லி, போக்கிரி வரிசையில் துப்பாக்கி என்று சொல்வேன்.



All is Well :))