15 August 2012

Orange - தெலுங்கு திரை விமர்சனம்

நான் தெலுங்கு படங்களையும் பார்ப்பேன் சில நேரங்களில். இந்த படத்தை நான் பார்க்க 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஹாரிஸ் ஜெயராஜ் மற்றது ராம் சரண் தேஜா. ஏன் என்றால் ஹரிஷின் இசை. கேட்க்கும் போதே நன்றாக இருந்தது (கேட்ட பாடல்கள்(இசை)தான்), மற்றது ராம் சரண்; அவரின் மஹாதீர(மாவீரன்) பார்த்தேன் அதனால் அவர் நடித்து வந்த அடுத்த படமான இதன் மேல் உள்ள எதிர்பார்ப்பு.  இந்த படம் 2010 ஆம் ஆண்டு வந்தது ஆனால் டவுன்லோட் செய்தது இந்த ஆண்டுதான் அதுவும் பல மாதங்களின் பின் நேற்றுதான் பார்க்க கிடைத்தது!!


படத்தின் கதை என்று பார்த்தால், இவர் அவுஸ்திரலியாவில் அவரின் அக்காவுடன் வசித்து வருகிறார். படம் தொடங்கும் போதே "எங்கள் காதலை நாங்கள் முறித்து கொள்வோம், நீ ஒரு சைக்கோ" என்று கமராவை(ஹீரோயினை) பார்த்து சொல்கிறார். அது யார், ஏன் என்பதை பிளாஷ்பக் மூலம் சொல்கிறார். அவர் படிக்கும் போதே டீச்சருக்கே "லவ் யு" சொன்னவர். இப்படி வாழ்கையில் ஒன்பது பெண்களை லவ் பண்ணி கை கழுவி விடுகிறார்!! இப்போ அந்த லூசு(அதுதான் ஹீரோயின்-பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்) வருகிறது . ராம் சரணுக்கு அவர் மீது  லவ் வருவதாக ஒரு சீன் அதுவும் முதல் சீன். என்ன கொடுமை; அரண்டுகொண்டு, விரண்டு கொண்டு. சொல்ல மறந்திட்டேன் ஹீரோயின் ஜெனிலியா; அப்போ சரிதான்!! பிறகு காலேஜ் போகும் போது அங்கு கோல்ப் விளையாட தெரியும் என்பதற்காக ஒருவனையும், சிங்க ஜோர்க் சொல்வான் என்பதற்காக ஒருவனையும், ஷாபி யாக இருக்கிறான் என்பதற்காக ஒருவனையும் இது லவ் பண்ணுது??? அந்த மூன்று பெரும் ஒரே நேரத்தில் dating போக கூப்பிடுகிறார்கள். அதனால் இது குலுக்கல் முறையில்  ஒருவரை தெரிவு செய்ய முடிவு பண்ணது. அந்த நேரத்தில் நம்ம ஹீரோவும் வாறார், வந்து தானும் உன்னை லவ் பண்ணுகிறான் என்று சொல்லி அவர் பெயரையும் எழுதி போடுகிறார்.


பிறகு இவர் அவரின் பின்னால் சுத்துகிறார். ஒரு நிறத்தில் வில்லன்களிடம் இருந்த அவரை காப்பாற்றுகிறார் அதனால் இதுக்கு அவர் மேல் லவ் வந்திடுது. ஒரு கட்டத்தில் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை முழுவதும் காதலிக்க மாட்டேன் என்று. அதனால் ஜெனிலியாவும் குழம்புது நானும் குழம்பிட்டேன்!! அதனால் ஜெனிலியாவுக்கு வேறு திருமணம் பார் படுகிறது. அங்கே வந்து ஜெனிலியாவின் மண்டையை காய வைத்து அந்த கல்யாணத்தை நிறுத்துகிறார். ஆனாலும் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை பூராக காதலிக்க மாட்டேன் என்று. அது ஏன் என்றால், அவர் இந்தியாவில் இருக்கும் போது "ரூபா" என்ற பெண்ணை லவ் பண்ணுகிறார். அவரிடம் உண்மையாக இருக்கிறார் அதனால் அவர்களுக்கு இடையில் மனஸ்தாபம் வருகிறது அதனால் இவர் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் சந்தோசமாக இருக்கிறது இப்போ. ஆனால் இவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அதனால் அந்த காதலையும் முறித்து கொள்கிறார். அத்தோடு காதலிக்கும் போது எப்படி ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருகிறார்களோ(இருந்தால்) அதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் இருக்க மாட்டார்கள் என்கிறார். அதனால்தான், நான் யாரையும் வாழ்க்கை முழுவதும் லவ் பண்ண மாட்டேன் என்கிறார்.



ஆனால் சரண் , ஜெனிலியாவை லவ் பண்ணுகிறார். சரணின் முக்கியமான பொழுது போக்கு, சுவர்களில் படம் வரைவது. அது அவருக்கு பிடிக்க வில்லை. அதனால் அவர் சொல்கிறார் நீ அதை விட்டு விட்டு என்னை வாழ்க்கை முழுவது காதலிப்பதாக இருந்தால் வா என்கிறார். கடைசியில், தன் காதலு(லி)க்காக தன் கொள்கையை மாற்றினாரா அல்லது அதே கொள்கையுடன் இருந்து அவரை பிரிந்தார என்பதுதான் கிளைமாக்ஸ்!!


 

உண்மையில் இந்த படம் பெரிதாக ஓட வில்லை. காரணம், கதை சொன்ன விதம், ஜெனிலியாவின் கதாப்பாத்திரம்(எத்தனை படங்களில்தான் ஒரே மாதிரி ரசிப்பது), எந்த வித விறு விறுப்பும்  இல்லாமல் கதை நகர்கிறது. இருந்தாலும் சொல்ல வந்த விடயம் நல்லது. அதாவது, இந்த காலத்தில் உண்மை காதலை யாரும் ஏற்பது இல்லை; அதற்க்கு இருபாலரும் காரணம். எல்லோரும் பொய்யாகவே காதலிக்கிறார்கள் அதையே இருபாலரும் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது படம்.


இந்த படத்தில் நான் ரசித்த விடயங்கள் என்றால், பாடல்கள்(கேட்டு பழகியவைதான்), ஒளிப்பதிவு, மற்றது வழமை போல பிரம்மானந்தம்!! வீட்டில் இருந்து பார்த்த படியால் போர் அடிக்காமல் பார்த்தேன் .


லவ் பண்ணுங்க ஆனால் உண்மையாக இல்லாமல் :))

12 August 2012

நீயும் என் தோழனே – சேகுவாரா

அறிந்தோ அறியாமலோ நான் இவர் பால் ஈர்க்க பட்டேன். ஒரு வேலை நான் வாழ்ந்த சூழல்தான் காரணமா தெரிய வில்லை?? இருந்தாலும் இவரை பற்றி என் ப்ளாக் கில் போட வேணும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். இன்று அது சாத்தியம் ஆகிற்று!!



உறுதியான, அழகான முகம், சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிவப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.
அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.
1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.
அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.
சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.
சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.
சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.
பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?
எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?
உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.
உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்க்கம் , உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்க்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.
வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.
ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.
கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து களம்
இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமெரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.
கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.
எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உருவாக வேண்டும்.
சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…
"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"
இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.
சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.
போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.
கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.
அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.

நன்றி:விக்னேஸ்வரன்
 

06 August 2012

உங்களுக்கு தெரியுமா


 பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாட்டிகன் சிட்டி

உலகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

வருடம் தோறும் பூமில் புதைந்து வரும் நாடு - நெதர்லாந்து

டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா


உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth

உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா )

பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

சத்தில்லாத உணவு - நீர்

கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 (தாயகம் - மெச்சிக்கோ)

அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - Fido

கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்

ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா

திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா