விஸ்பரூபம் பிரச்சினை ஒரு மாதிரி ஓய்ந்து கொண்டு வருகிறது; ஆனாலும் மழை நின்றும் சாரல் அடிப்பது போல இன்னமும் அதை பற்றி கதைத்து கொண்டு இருக்கிறோம் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களிடமும். நானும் எனது நண்பர் ஒருவரிடம் இதை பற்றி கதைத்தேன். அவர் சொன்னார், இதற்க்கு விதிக்கபட்ட தடை சரி. ஏன் என்றா பாபர் மசூதி, முள்ளிவாய்க்கால் போன்ற பிரச்சனைகளை எடுத்து இருக்கலாம்தானே என்று கேட்டார்(பேஸ் புக் நல்லா பாப்பார் போல). அவர் அதை எடுக்காததுக்கும் இதை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என சொன்னேன்.
முதலாவது காரணம், நீங்கள் எடுக்கலாம் என சொன்னவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பிரச்சினையே தவிர உலக அளவில் நடக்கின்ற/பயப்பட கூடிய பிரச்சினை அல்ல, ஆனால் தலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புக்கள் உலக அளவில் செயல்படுகின்ற அமைப்பு. அதனால் அந்த பிரச்சினையை அவர் எடுத்து இருக்கலாம் என்றேன்.
இரண்டாவது, அந்த பிரச்சினை எல்லாம் நடந்து முடிந்த கசப்பான அனுபவங்கள். ஆனால், இந்த தீவிரவாதம் என்பது இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்ற விடயம். அதனால் அவர் செத்த பாம்பை அடிக்க விருப்ப படாமல் உயிர் உள்ள பாம்பை அடிக்க ஆசைபட்டு இருக்கலாம் அல்லவா என்றேன்.
இருந்தாலும் அவர் செய்தது தப்புத்தான், அவருக்கு அந்த பிரச்சனைகளை எடுக்க தைரியம் இல்லை என்று மீண்டும் விக்ரமாதித்தன் போல முருங்கை மரம் ஏற முற்பட்டார். நான் ஒரு சிரிப்பை பதில் அளித்து விட்டு என் வேலையே பார்க்க போனேன்.